இந்தோனேஷிய கடற்படையால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்

14indonesia.jpgஆஸ்தி ரேலியாவுக்கு கப்பலில் செல்ல முயன்றபோது இந்தோனேசியாவின் கடற்படையால் ஜகார்தா அருகேயுள்ள மெரக் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் 260 இலங்கை தமிழ் அகதிகள் தாம் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளதாகக் கூறுகின்றனர்.

கப்பலில் உள்ள சிறு குழந்தைகளைத் தவிர மற்றவர்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் பங்கேடுத்துள்ளதாக தமிழோசையில் தெரிவித்த கப்பலில் உள்ள அகதிகளில் ஒருவர், உடனடியாக ஏதாவது ஒரு நாடு தமக்கு அடைக்கலம் கொடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டம் நடைபெறுவதாக குறிப்பிடுகின்றனர்.

கப்பலில் உள்ளவர்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்தவர்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவர்களில் சிலர் முகாம்களில் இருந்து தப்பிவந்தவர்கள் என்றும் மேலும் தெரிவித்னர்.

சட்ட விரோத குடியேறிகள் இந்தோனேசியா வழியாக தமது நாட்டுக்கு வருவதை இந்தோனேசியா தடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் சில தினங்களுக்கு முன்பாகத்தான் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply to jalpani Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

15 Comments

  • john
    john

    இவர்களுக்கு இன்னும் காம்பேகர் சமாச்சாரம் எட்டவில்லப் போலும்!!

    Reply
  • முன்னாள் பொரளி
    முன்னாள் பொரளி

    உங்களுக்கு அவர்களின் நிலமை புரியவில்லை அவர்களில் ஒருத்தராக இருந்திருந்தால் புரிந்திருக்கும் அவரவருக்கு அவருடைய சுயநலம்தான் முக்கியம் சிந்தையும் அப்படித்தான் இருக்கும்.

    Reply
  • nallurkanthan
    nallurkanthan

    I can not understand why they took so much of pain to go this way.If they wanted to seek protection they should have gone to Tamilnadu simply and there are refugees camps in many places.This refugee game is not a new one.There are many human smugglers who have been in the business from 80s.Can a bonafide refugee spend more than usd 50,000.Human smugglers are always supported by various human rights activists.

    Reply
  • babu
    babu

    Sri Lankan asylum seekers
    http://www.youtube.com/watch?v=ZZz765ZduBo&feature=player_embedded

    Reply
  • sanki
    sanki

    ஜான்
    நீங்கள் இங்கு இருந்து கொண்டு நல்ல வடிவாக கதை சொல்லுங்கோ அந்த மக்கள் படும் துன்பத்தினை இப்படியா எழுதுகிறது. உங்களுக்கு ஒரு இரக்கம் இல்லையா?…

    நன்றி

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    This refugee game is not a new one.There are many human smugglers who have been in the business from 80s.Can a bonafide refugee spend more than usd 50,000.Human smugglers are always supported by various human rights activists.

    நல்லூர்க்கந்தன்,
    அகதிகளாக நீங்குவோர் எங்கு செல்லவேண்டும் எனத்தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. அது உங்களுக்கு விளங்குமாறு இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. மேலும் அவர்கள் இந்தியாவுக்குத்தான் செல்ல வேண்டும் என நீங்கள் கோருவது என்ன வகையில் நியாயம்? ஐ.நாவின் அகதிகளுக்கான விதிமுறைகளை ஏற்காத விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகளில் நீங்கள் குறிப்பிடும் தமிழ்நாடு இருக்கும் இந்தியாவும் ஒன்று. இன்றுவரை ஈழத்தமிழ் அகதிகளை ஐ.நா அகதிகள் ஆணையம் பார்வையிடவோ அன்றி உதவி செய்யவோ அனுமதிக்காத நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய அகதி முகாம்கள் ஈழ அகதி முகாம்களுக்கு ஒன்றும் குறைந்தவையல்ல.

    நீங்கள் சொல்வது போல இந்த ‘அகதி விளையாட்டு’ (??) ஒன்றும் புதிதல்ல. நீங்கள் சொல்வதுபோல அது 80களில் தான் தொடங்கியது என்பதும் தவறு. அமெரிகாவுக்கு ஐரிஷ் காரர் வந்தபோதில் இருந்தே ஆரம்பித்துவிட்டது. அது போலந்துக்காரர், ருமேனியர், யூதர்கள், கியூபர்கள், சீனர்கள், ஈழத்தவர் என இன்றும் தொடர்கிறது. இதில் கடத்தல்காரர்களுக்கு இருக்கும் பங்கு ஒன்றும் புதிதல்ல என்பதும் நீங்கள் அறியாததல்ல.

    மேலும் ‘உண்மையான அகதி’ என நீங்கள் யாரைக்குறிப்பிடுகிறீர்கள். $50,000 இருப்பவர் அகதி இல்லை என உங்களுக்கு யார் சொன்னது? அகதி என்பதன் அர்த்தம் என்ன என்பதனை ஐ.நா அகதிகள் உயர்ஸ்தானிகராலய (UNHCR)இணையத்தில் நீங்கள் பார்க்கலாம். இதில் அகதின் பணபலமோ ,எங்கு செல்லவேண்டும், எவ்வாறு அவர் செல்லவேண்டும் என்பது பற்றியோ குறிப்பிடவில்லை என நினைக்கிறேன்.

    Who is a refugee?
    A refugee is someone who has been forced to flee his or her country because of persecution, war, or violence. A refugee has a well-founded fear of persecution for reasons of race, religion, nationality, political opinion or membership in a particular social group. Most likely, they cannot return home or is afraid to do so. War and ethnic, tribal and religious violence are leading causes of refugees fleeing their countries.

    Reply
  • முன்னாள் பொரளி
    முன்னாள் பொரளி

    சாந்தன் நன்றி சிலருக்கு உங்களால்தான் புரியவைக்க முடியூம்

    Reply
  • jalpani
    jalpani

    “எங்களை உங்களது பிள்ளைகள் போல நினைத்துக் கொள்ளுங்கள். தயவு செய்து எங்களையும் எங்களது உயிர்களையும் காப்பாற்றுங்கள். எங்களால் இலங்கையில் வாழவே முடியாது. அவுஸ்திரேலியா இல்லாவிட்டால் கூட பரவாயில்லை வேறு எந்த நாட்டுக்காவது எங்களை அனுப்பி விடுங்கள்” என இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகில் தவித்துக் கொண்டிருக்கும் 9 வயது தமிழ்ச் சிறுமி உருக்கமுடன் கேட்டுள்ளார்.

    இலங்கையிலிருந்து பெருமளவில் பணம் கொடுத்து மலேசியா சென்று அங்கிருந்து சிறிய கப்பல் மூலம் 300 பேர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர். ஆனால் அவர்களை இந்தோனேஷிய கடற்படையினர் தடுத்து தற்போது மேற்கு ஜாவா தீவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    இவர்களை தற்போது கப்பலிலிருந்து இறக்க கடற்படையினர் முயற்சித்து வருகின்ற போதிலும் தங்களை கப்பலிலிருந்து அப்புறப்படுத்த முயன்றால், காஸ் சிலிண்டர்களை வெடிக்க வைத்துத் தற்கொலைசெய்து கொள்வோம் என தமிழர்கள் கூறி வருவதால் கடற்படையினர் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கின்றனர்.

    இந்த நிலையில் தங்களது உயிர்களையும், தங்களையும் காப்பாற்றுமாறும், புகலிடம் அளிக்க வேண்டும் என்றும் கோரி தமிழர்கள் உருக்கமான கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்தக் கப்பலில் உள்ள 9 வயது சிறுமி பிருந்தா கதறியபடி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கையை ஆஸ்திரேலியாவின் ஏ.பி.சி .டிவி ஒளிபரப்பியுள்ளது.

    சிறுமி பிருந்தா;
    ” உலக அரசுகளே, உங்களது கதவுகளை எங்களுக்காகத் திறந்து வையுங்கள். தயவு செய்து எங்களையும், எங்களது உயிர்களையும் காப்பாற்றுங்கள். நாங்கள் உங்களது பிள்ளைகள். தயவு செய்து எங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள். ஐயா, தயவு செய்து எங்கேயாவது எங்களை அழைத்துச் செல்லுங்கள். அது அவுஸ்திரேலியாவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எங்களை ஆதரிக்கும் எந்த நாடாக இருந்தாலும் பரவாயில்லை. எங்களால் இலங்கையில் வாழவே முடியாது” என்று கண்களில் நீர் வழிய உருக்கமாக கூறியுள்ளார்.

    மிகவும் சிறிய கப்பலில் 290 பேர் அடைபட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அவர்கள் அதில் அடைபட்டுத் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்த 9 வயது சிறுமியையும் புலி என முத்திரை குத்துங்கள். சிங்கள அரசு பாலாறும் தேனாறும் பாய பளிங்கு மாளிகைகளில் தமிழரை வாழவைக்கும் என பிரச்சாரம் செய்யுங்கள்.

    Reply
  • sanki
    sanki

    Hello John
    You are trying to diffuse anger of an ordinary tamil like us. Look at the comments like, Nallur Kanthan, சாந்தன், jalpani.

    சாந்தன் நன்றி சிலருக்கு உங்களால்தான் புரியவைக்க முடியூம்
    இந்த 9 வயது சிறுமியையும் புலி என முத்திரை குத்துங்கள். சிங்கள அரசு பாலாறும் தேனாறும் பாய பளிங்கு மாளிகைகளில் தமிழரை வாழவைக்கும் என பிரச்சாரம் செய்யுங்கள்./
    Thank you for this comment jalpani. I am not a LTTE sympathisar at all.

    Sanki

    Reply
  • மாயா
    மாயா

    அம்பலத்திற்கு வருகின்றது புலிகளின் ஆட்கடத்தல் வியாபாரம்.
    புலிகளின் தலைவர் பிரபாகரனின் நேரடிக் கண்காணிப்பில் இருந்த கப்பல் கம்பனிக்காறர்கள் வலையில் சிக்கும் அபாயம்.
    கடந்த 11ம் திகதி அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரும் நோக்கில் சிறியரக சரக்குக் கப்பல் ஒன்று 253 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்தது. இந்தோனேசியக் கடற்பரப்பில் கப்பலில் ஏற்பட்ட கோளாறுகாரணமாக கப்பல் நகர்வது தாமதமானபோது இந்தோனேசிய கடற்படையினரால் கப்பல் சுற்றி வளைக்கப்பட்டது…………. புகைப்படங்களுடன் ilankainet தகவல்.

    Reply
  • மாயா
    மாயா

    அகதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர். பலர் உயிரிழப்பு.
    அவுஸ்திரேலியாவிற்கு அரசியல் தஞ்சம் கோரும் நோக்கில் படகொன்றில் சென்று கொண்டிருக்கையில் இந்தோனேசியாவில் தடுத்து நிறுத்தப்பட்டபோது உண்ணாவிரம் இருந்த இலங்கை அகதிகள் என தம்மை கூறுவோர் 56 மணித்தியாலயங்களின் பின்னர் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

    அவர்களில் பலர் உயிர் இழந்துள்ளதாக Sydney Morning Herald எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. அங்கு சென்ற மக்கள் சார்பான பேச்சாளர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ள அலெக்ஸ் என்பவர், கடத்தல்காரர்கள் 30 குடும்பங்களிடமிருந்து 4 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயணச் செலவாக பெற்றுள்ளதாக பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ளார். பிறந்த குழந்தை ஒன்றுக்கு கூட 15000 அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

    4 மில்லியின் அமெரிக்க டொலர்களை வழங்கக் கூடிய 30 குடும்பங்கள் வன்னியில் இருந்தாக என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது.

    படம்:
    http://2.bp.blogspot.com/_qKP1tij2zvQ/StoaVyDOoLI/AAAAAAAAEnQ/czBQmMHnshw/s400/asylum+seekers5.jpg

    Reply
  • BC
    BC

    // 4 மில்லியின் அமெரிக்க டொலர்களை வழங்கக் கூடிய 30 குடும்பங்கள் வன்னியில் இருந்தாக என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது. //

    அவர்கள் தான் தன்மான தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // 4 மில்லியின் அமெரிக்க டொலர்களை வழங்கக் கூடிய 30 குடும்பங்கள் வன்னியில் இருந்தாக என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது.//
    காசை விடுங்கள் அந்தச் சிறுமி பேசும் ஆங்கிலமும், பலரின் உடைகளும் அவர்களை வன்னியிலிருந்து வந்தவர்களா என்ற கேள்வியை எல்லோர் மனத்திலும் நிச்சயம் எழுப்பும்.

    Reply
  • Thaksan
    Thaksan

    வெறும் ஏழைகள் மட்டும்தான் அகதிகள் என்ற வரையறைக்குள் வருவார்கள் என கற்பிதம் கொள்பவர்கள் தன்னிலை மறுப்பவர்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. அவர்கள் புலம்பெயர்ந்து தஞ்சம் கோரியது மட்டும் 100வீதம் வாழ்வு மறுக்கபப்ட்டதாலா? என்னைப் பொறுத்த வரையில் இங்கிருந்து(ஈழத்தில்) புலம்பெயர்ந்தவர்களில் 90 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பொருளீட்ட முற்பட்டவர்களே (எனது இரு சகோதர்கள் உட்பட). அகதி என்ற பதமே கதியற்றவர்கள் என்பதிலிருந்தே உருவானது. உண்மையான அகதிகள் 40> 50 லட்சம் ரூபாய்கள் கொடுத்து இடம்பெயரும் வக்கற்றவர்கள். தங்கள் மீது சுமத்தப்பட்ட இத்தனை அவலங்களையும் சுமந்தபடி இந்த மண்ணிலேயே வாழ்வுக்காக ஏங்குபவர்களே உண்மையான அகதிகள். வாழ்க்கை என்பது வெறும் பணம் ஈட்டுவது மட்டுமல்ல. ஒவ்வொருவரின் மரணத் தருவாயில் மட்டுமே உண்மையான வாழ்வின் அர்த்தத்தை புரிய முடியும். நாங்கள் யாரும் பிறக்கும்போது எதையுமே கொண்டுவரவில்லை. அதேபோல் இறக்கும்போதும் எதையும் எடுத்துக் கொண்டு போகப் போவதில்லை. நாங்கள் பிறருக்காக வாழ்ந்த வாழ்க்கை மட்டுமே மரணத்திற்கு அப்பாலும் வாழ்ந்து கொண்டிருக்கும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //வெறும் ஏழைகள் மட்டும்தான் அகதிகள் என்ற வரையறைக்குள் வருவார்கள் என கற்பிதம் கொள்பவர்கள் தன்னிலை மறுப்பவர்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. //

    ஏழைகள் மட்டும் தான் அகதிகள் என்ற வரையறைக்குள் வருவார்கள் என இங்கு எவரும் கட்டியம் கூற வரவில்லை. வன்னியிலுள்ள அகதிகளுடன் இவர்களை ஒப்பிட முடிகின்றதா, என்பது தான் சுட்டிக் காட்டப்படட்டுள்ளது. வன்னி அகதிகளைச் சாட்டி, இந்தியா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் கூட இப்படி வந்திருக்கலாம். தற்போது ஒவ்வொரு விடயமாகக் கசியத் தொடங்கியுள்ளது. அதுபோல் கனடாவின் கடற்பரப்பில் 78 இலங்கை இளைஞர்கள் கப்பலுடன் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் அகதிகளைக் கடத்தி பணம் சம்பாதிக்கும் முன்னாள் புலிகள் என்ற சந்தேகமும் வலுப்பெற்றுள்ளது. இனிவரும் நாட்களில் இன்னும் பல விசித்திர செய்திகள் வெளிவந்தாலும் ஆச்சசரியப்படுவதற்கில்லை.

    Reply