ஜனாதிபதி பரக் ஒபாமா அமெரிக்காவில் முதன் முதலாக தீபாவளி கொண்டாடி வரலாறு படைத்துள்ளார். நாளை மறுநாள் ( 17 ம் தேதி ) உலக நாடுகளில் தீபாவளியைக் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் என்றும் இல்லாதவாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தார். இங்குள்ள ஈஸ்ட் ரூம் என்னும் பாரம்பரிய அறையில் விழா நடந்தது.
வேத மந்திரங்கள் முழங்க குத்துவிளக்கில் தீபம் ஏற்றினார். ஸ்ரீ நாராயணச்சாரியார் திகலகோடே வேத மந்திரங்களை படித்தார். உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்வதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இவ்விழாவில் இந்திய அதிகாரிகள், இந்திய சமூக பிரதிநிதிகள் இந்திய மத்திய அமைச்சர் ஆனந்த்சர்மா, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா ஷங்கர் ஆகியோரும் பங்கேற்றனர்.
london boy
இது என்ன புதுசாய். நம்மட பக்கிங்காம் பலஸ்சில இப்ப எவ்வளவு காலமாகக் கொண்டாடுறாங்கள்.
மகுடி
அமெரிக்காவில கொண்டாடியிருக்கிறாங்க. அதுவே செய்தி. நாங்க எவ்வளவு நாளா கொண்டாடுறம். யாரும் கண்டு கொள்வில்லை.
பல்லி
26.11 மாவீரர் நாளாகவும்(பிரபாவின் பிறப்பு)
17.05 தீபாவளியாகவும்(பிரபாவின்;;;;;;;;;) கொண்டாட போவதாக சில பல அவை பேசிக்கினம், விடுப்பு பார்த்த இடத்தில் பல்லி பொறுக்கியது;
மாயா
//17.05 தீபாவளியாகவும்(பிரபாவின்;;;;;;;;;) கொண்டாட போவதாக சில பல அவை பேசிக்கினம் – பல்லி //
அர்த்தம் தெரியாமல் கொண்டாடுவதை விட, அர்த்தம் தெரிந்து கொண்டாடலாம். நல்ல முயற்சி.
சாந்தன்
‘….கொண்டாட போவதாக சில பல அவை பேசிக்கினம்,….
நல்லது, சரி அதில எண்டாலும் 35 பேருக்கு மேல வருகினமோ எண்டு பார்ப்பம்!!!