இந்தி யாவில் இலங்கை அணி அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அச்சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணியுடன் 5 ஒருதினப் போட்டிகளிலும், 2 டுவென்டி20 போட்டிகளிலும், மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உ ள்ளது.
போட்டிகள் நடைபெறும் இடங்களை கிரிக்கெட் வாரியத்தின் சுற்றுப்பயணத் திட்டக் குழு உறுதிசெய்தது.
டெஸ்ட் போட்டி நடைபெறும் இடங்கள்: மும்பை, கான்பூர் மற்றும் ஆமதாபாத்
ஒருதினப் போட்டி நடைபெறும் இடங்கள்: கட்டாக், ராஜ்கோட், விசாகப்பட்டினம், தில்லி மற்றும் கோல்கத்தா டுவென்டி20 போட்டி நடைபெறும் இடங்கள்: மொஹாலி மற்றும் நாக்பூர்.
போட்டி நடைபெறும் தேதிகள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என பி
சிசிஐ செயலர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.