பிலிப் பைன்ஸ் நாட்டில் ‘பார்மா’ என்ற புயல் கடுமையாகத் தாக்கியது. இதனையடுத்துப் பலத்த மழை பெய்தது.
இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. நிலச்சரிவும் ஏற்பட்டதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஏராளமானோர் பலியானார்கள். வெள்ளம் வடிந்த பிறகும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
வடக்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட ஒரு மலைக் கிராமத்தில் இன்று மீட்பு பணி நடந்தது. அப்போது மண்ணுக்குள் புதைந்துக் கிடந்த 153 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.