தென் மாகாண சபைத் தேர்தலில் (இன்று நடைபெறும்) படுதோல்வி அடைய விருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினர் அதற்கான காரணங்களை முன்கூட்டியே தயாரிப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான ஆரம்ப நிகழ்வின் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் குருநாகல் மாவட்ட ஐ.தே. க. எம். பி. தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இன்று நடைபெறும் தென் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பு பெட்டிகளை வாக்குகள் எண்ணும் நிலையத்திற்கு எடுத்துச் செல்லும் பஸ் வண்டிகளில் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் செல்லுவதற்கு அனுமதிக்கப்படாதது குறித்து எம். பி. ஜயசேகர கேள்வி எழுப்பினார்.
இக்கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா, ஐ. தே. க. ஏற்கனவே ஏழு மாகாண சபைகளுக்கான தேர்தல்களிலும் படுதோல்வி அடைந்திருக்கின்றது என்றார்.