2009 ம் ஆண்டுக்கான சமாதானத்துக்கான நோபல் பரிசு இந்த வெள்ளிக்கிழமை பிரித்தானிய ஜி.எம்.ரி நேரம் காலை 9 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் இலங்கையைச் சேர்ந்தவருக்கு அதிலும் குறிப்பாக தமிழர் ஒருவருக்கு இம்முறை இவ்விருது கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்பதே. இவ்வகையில் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்களான ராஜன் கூல்லுக்கும் கோ.சிறிதரனுக்கும் இவ்வருட சமாதான நோபல் பரிசு பெறும் வாய்ப்பு அதிகமிருக்கிறது.
நோபல் பரிசுகளில் அதிகம் சர்ச்சைக்குரியது சமாதானத்துக்கான பரிசுகளே. ஏனைய பரிசுகள் துறைசார்ந்த அறிஞர்களால் தெரிவுசெய்யப்பட சமாதானத்துக்கான பரிசோ நோர்வே பாராளுமன்ற அரசியல்வாதிகளாலும் அவர்களை ஏய்க்கும் அமெரிக்க அரசாலுமே உண்மையில் தெரிவு செய்யப்படுகிறது. இந்த வகையில் அரசியல் மயப்படுத்தப்பட்ட விருது சமாதானத்துக்கான நோபல் பரிசு. இதனுடைய அர்த்தம் பரிசு பெற்ற அனைவருமே தகுதியற்றவர்கள் என்பதல்ல. ஹென்றி கிசிங்கர் சில இஸ்ரேலிய அரசுத்தலைவர்கள் சில அமெரிக்க அரசுத் தலைவர்கள் அன்வர் சதாத் முதலியவர்களுக்கு வழங்கப்பட்ட சமாதானப் பரிசுகள் ஏளனத்துக்கும் சர்ச்சைக்கும் உரியது என்றால் முகமட் யூனுஸ் வங்கரி மாதாய் கொபர்ச்சேவ் ஆங் சாங் சூ கீ போன்றவர்களுக்கு வழ்ஙகப்பட்டவைகள் மிகப்பொருத்தமானவைகள்.
சமாதானத்துக்கான நோபல் பரிசுகளில் தகுதி தகுதியின்மை மட்டுமன்றி வழங்கப்படுகின்ற கால நேரங்களும் மிகுந்த சர்ச்சைக்குரியவை. தலாய் லாமாவுக்கான விருது 1988 ம் ஆண்டுக்கு முதலே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சீன மாணவர் எழுச்சியை அடுத்து நடந்த தியனமென் சதுக்கப்படுகொலைகள் நடந்த 1989 ம் ஆண்டிலேயே தலாய் லாமாவுக்கு விருது வழங்கப்படுகிறது. கிழக்கு தீமோர் பாதிரியார் கார்லோஸ் பெலோ விடுதலைப் போராளி ராமோஸ் ஹோட்டா போன்றவர்களுக்கும் 1996 ம் ஆண்டுக்கு முதலே வழங்கப்பட்டிருக்க வேண்டும். மறுதலையாக கிளின்ரன் நிர்வாகத்தில் இந்தோனேசியா தொடர்பான கொள்கை மாற்றத்தை நாடி பிடித்துப் பார்த்த பின்னரே தீமோர்க்காரர்களுக்கு வழங்கப்பட்டது. ராப்லோயிட் பத்திரிகைகளுக்குரிய சூடு சுவாரசியம் பரபரப்பு என்பனவும் இப்பரிசுத்தெரிவில் உண்டு. ஒரு பெரும் போர் முடிந்த பின்னர் சம்பந்தப்பட்ட இரு தரப்பிலிருந்தும் ஆட்களை தெரிவு செய்து “வஞ்சகமில்லாமல்”; பரிசு கொடுப்பார்கள். உதாரணம் வியட்னாம் போரை அடுத்து கிசிங்கருக்கும் வியட்னாமிய தலைவர் டக் தோவுக்கும் வழங்கப்பட்ட விருது. விவசாய மரபணு விஞ்ஞானி நோமன் போர்லோக் 1956 ம் ஆண்டிலேயே மெக்ஸிக்கோவில் பெரு விளைச்சலை நிறுவி சாதித்து விட்டார். ஆனால் 1965 இலிருந்து 1970 வரை அவர் “பஞ்சம் பிழைக்கும் பரதேசமாம்” இந்திய துணைக்கண்டத்துக்கு வந்து “படங்காட்டும்” வரை நோபல் மன்று அவரை கணக்கெடுத்துப் பார்க்கவில்லை.
இத்தகைய நோபல் சமாதானப் பரிசின் வரலாற்றை கூர்ந்து நோக்குகிற போதுதான் இம்முறை நம்மவர்க்களுக்கான முறை என்பது தெரிகிறது. அதிக அளவில் இவ்வாண்டில் உலகப் பத்திரிகைகளில் அடிபட்ட செய்தி இலங்கை அரசு வெல்ல முடியாது என்று நம்பப்பட்ட மரபு சாரா போர்க்காரர்களான விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டது. தென்னாசியாவுக்கு வெளியே புலம்பெயர்ந்து வாழ்கின்ற எட்டு இலட்சம் தமிழர்களில் பெரும்பாலானோர் செம்மறி ஆடுகளாக விடுதலைப் புலிகளின் மந்திரத்தை ஓதி உலக நாடுகளில் ஈழத்தில் ஒரு இனப்படுகொலை நடக்கிறது என தப்பாட்டம் ஆடியும் உலக ஊடகங்களின் கவனத்துக்கு வந்தார்கள். போதாக்குறைக்கு நோர்வேக்காரர்களும் சமாதான ஒப்பந்த மத்தியஸ்தர்களாக இங்கு சிக்குப்பட்டிருக்கிறார்கள். நோபல் மன்றத்திற்கு இது உத்தமமான பொருத்தம்.
உலக நாகரிகத்தின் முக்கியமான யூத முஸ்லீம் கிறிஸ்தவ மதங்கள் தோன்றிய பலஸ்தீனத்தின் பிரச்சனையே “தீர்த்துவைத்தோம்” என்று நோர்வேக்காரர்கள் 1994 ம் ஆண்டில் அரபாத்துக்கும் அப்போதைய இரு இஸ்ரேலியத் தலைவர்களுக்கும் நோபல் பரிசு கொடுத்து உலகத்தின் சமாதான மொத்த வியாபாரிகள் தாங்களே என்று உலகின் காதில் பூச்சுற்றினார்கள். ஆனானப்பட்ட அவர்களுக்கு ராஜபக்ஷ அரசாங்கம் முகத்தில் கரிபூசியது மட்டுமின்றி கன்னத்தில் அறைந்தும் அனுப்பியிருக்கிறது. மிகவும் நொந்து போயிருக்கிறார்கள் எரிக் சொல்கைம் போன்ற சர்வதேச சமாதான யாவாரிகள். இப்போதைக்கு அவர்களுக்கு ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு தாங்களும் பதிலுக்கு கரிபூச வேண்டும். அதற்கு ராஜபக்ஷவை அம்பலப்படுத்தி அவமானப்படுத்தும் ஒருவருக்கு நோபல் விருது கொடுக்க வேண்டும்.
மேலும் ராஜபக்ஷ பிறப்பால் அமெரிக்கரோ அல்லது யூதரோ இல்லை என்பதால் வியட்னாம் போர் முடிவு போல இரு தரப்பினருக்கும் பரிசு கொடுக்க முடியாது. எனவே இங்கு “போரில் தோற்ற” தமிழர் பிரதிநிதிகளான மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கு பரிசு கொடுக்கலாம் என்றால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. 2002 ம் ஆண்டு அமுலுக்கு வந்த போர் நிறுத்தத்தில் நோர்வேக்காரர்களான தங்களது மத்தியஸ்தத்தை அதிகம் விமர்சித்தது அதே யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமே. அதிஸ்ரவசமாக புலிகளின் மங்கு சனி காலத்திலிருந்து புலிகள் மடிந்ததுவரை மேற்குறித்த சங்கத்தின் அறிக்கைகள் அதிகமாக ராஜபக்ஷ அரசாங்கத்தையே விமர்சித்து வந்துள்ளன.
உண்மையைச் சொல்லப்போனால் 2005 ம் ஆண்டிறுதியில் தெரிவு செய்யப்பட்ட ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஜனநாயக விரோத போக்குகளை உலகுக்கு அம்பலப்படுத்தியது மேற்கூறிய மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கைகளே. திருமலையில் 5 மாணவர் மற்றும் 17 பிரெஞ்சு தொண்டர் நிறுவன உறுப்பினர் படுகொலை என்பனவற்றை நிகழ்த்திய இலங்கை இராணுவத்தினரை அம்பலப்படுத்தியது யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமே. புலிகள் துவம்சம் செய்யப்பட்ட பின்னர் யாழ் சங்கக்காரர் ராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்தே உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளார்கள். இதன் காரணமாகவே இவர்கள் இப்போது வெளிநாடுகளிலிருந்து இயங்குகிறார்கள். மேற்கூறிய காரணங்கள் காரணமாகவே நோர்வே மன்றின் கடைக்கண் பார்வை சங்கத்தின் மீது விழுந்துள்ளது.
பிறப்பால் ஒரு தமிழர் என்றாலும் ராஜன் கூல்லின் எழுத்துக்களுக்கூடாகவும் வாதங்களுக்கூடாகவும் வெளிப்படுவது ஒரு சமாதான இலங்கைக்கான சாத்தியமான திட்ட வரைவே. (பார்க்க அவரின் ஆங்கில நூலான The arrogance of power)
மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெறும் அனைத்து தகுதிகளும் இருக்கிறது. இவ்விருது உண்மையிலேயே இவர்களுக்கு வழங்கப்பட்டடால் ஒரு மோசமான பாழாட்சியை நோக்கி இலங்கையை ஓட்டிச்செல்லும் ராஜபக்ஷ நிர்வாகத்துக்கு இது பேரிடியாக அமையும். காலத்தின் தேவையும் அதுதான்.
சாந்தன்
‘..ஒரு சமாதான இலங்கைக்கான சாத்தியமான திட்ட வரைவே. (பார்க்க அவரின் ஆங்கில நூலான The arrogance of power….’
இப்புத்தகம் ஏறத்தாழ 500 பக்கங்களுக்கு மேல் கொண்டது. இதில் எங்கே ‘சாத்தியமான’ மற்றும் ‘திட்ட வரைவு’ உள்ளது எனக்கூற முடியுமா?
அவ்வாறாயின் ஒரு மிக சீரியசான புத்தகத்துக்கு பெயரை ‘Sri Lanka: The Arrogance of Power: Myths, Decadence & Murder ’
’ஸ்ரீலங்கா: அதிகாரத்தின் ஆணவம்: கற்பனைகள், வீழ்ச்சிகள் மற்றும் கொலைகள்” என ஏன் வைத்தனர்.
ஆனாலும் அதிகார ஆணவமும் கொலைகளுமே ஸ்ரீலங்காவில் சாத்தியமானவை எனில் அதுவும் ஒருவகையில் ”திட்ட வரைவு” தான்.
தாமிரா மீனாஷி
ராஜன் ஹூலின் அறிக்கைகள் சகல போர்த்தரப்பினரதும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தின என்பதில் விவாதத்திற்கு இடமில்லை.. ஆனால், நோபெல் பரிசு பெறும் அளவுக்கு இலங்கைத்தீவுக்கு வெளியே அவை முன்னுதாரணமாவையாக இருந்தனவா என்பது விவாதத்திற்குரியது..மேலும் ராஜபக்ஷ அரசாங்கம் போரின் இறுதி வரை மேற்கு நாடுகளின் நண்பனாகவே நடந்து கொண்டமை பரிசிற்கான வாய்ப்புக்களைக் குறைக்கின்றது..
Thaksan
மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்கு நோபல் பரிசு வழங்கப்படுமானால் அந்த பரிசிற்கான பெருமை மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை விட நோபல் பரிசு பரிந்துரைகுழுவையே சாரும். மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் இடையறாத துணிகரமான பணியை மனித உரிமை ஆர்வலர்கள் எவரும் மதிப்பிறக்கம் செய்துவிட முடியாது. உலகின் மிகமோசமான பயங்கரவாத அமைப்பிற்கும்(புலிகள்)>அங்கீகாரமளிக்கப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கும் இடையில் நின்று மனித உரிமைகளுக்காக களத்தில் பணியாற்றிய துணிவு அபாரமானது என்பதை புரிந்துகொள்ளவது சிக்குண்டிருந்தவர்களால் மட்டுமே முடியும்.
jimmy
எப்படிப்பாரத்தாலும் படித்துப் பட்டம் பெற்றவனுக்குத்தான் பட்டமா? அந்த போருக்குள் வாழந்தவனுக்கும் அந்தப்போரில் சிக்குண்டு தப்பித்துப்போய் வாழ்ந்தவனுக்கும் படங்கள் கிடையாத என்ன இது தனது வர்க்கத்துக்கு மட்டும் தான் பட்டம்.
mohanasundaram
Both of them have been consistently upholding the value of human dignity and exposing fearlessly impartially those who violate human rights in Sri Lanka. The danger they encounter is unimaginable and very serious. In spite of this they have the courage to continue their mission. They are not only recorders of contemporary history but also prophets. Both of them very well deserve the nobel prize for peace. I wish them best of luck
Hats off to both of you
Mohanasundaram
Raghavan
வாழ்த்துக்கள். நட்சத்திரனுக்கு…..
mathan
ந.செ. தம்எதிர்பார்ப்பில் மண்போட்டுவிட்டதாகச் சொல்லி ந.செவின் இரசிக இரசிகைகள் பட்டாளம் கையில் மண்ணெண்ணெய்க்கானுடன் தீக்குளிக்கத் தயாராவதாகக் கேள்வி. காரணம் ந.செவிடமிருந்து “போலிப்பேராசிரியருக்கு” ஏன் நோபல் பரிசு கொடுக்கக்கூடாது என்றொரு கட்டுரையை தாம் எதிர்பார்த்ததாகவும் ஆனால் கட்டுரையின் ஓரிடத்தில் கூட அது பற்றி ஒரு குறிப்பும் இல்லையென்றும் அவர்கள் கொதித்துப் போயிருக்கிறார்களாம். குத்துப்பாட்டு இல்லாத விஜய் படம் போல ஆகிவிட்டதாம் இக்கட்டுரை. உடனடியாக அடுத்த ரிலீசிலாவது குத்துப்பாட்டு இல்லாவிட்டால் தீக்குளிப்புத் தான் ஒரே முடிவு என்றும் சொல்கிறார்கள்.
Constantine
Here we go again… people are making criticism for the sake of it. Is that complex or jealousy – or BOTH??
Constantine
sumi
இலங்கையில் இன்று பயங்கரவாதம் ஒழிந்து சமாதானம் மலர்ந்து வருவது கண்கூடாக தெரிகின்றது. இச்செயலுக்கு முக்கிய காரணியானவருக்கே 2009ம் ஆண்டுக்கான சமாதானத்திற்கான நோபல்பரிசு கொடுபடவேண்டும். ஆகவே இதற்கு முக்கியகாரணியான கருணா அம்மானே தெரிவு செய்யப்படவேண்டும்.இதைப்பலர் எதிர்க்கலாம். ஆனால் உண்மையான உரித்தாளி கருணாதான். அதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
Constantine
No ,, sumi is wrong. Prabaharans death created the peace – or at least stopped daily killings. Therefore, Thesiya Thalivar Prabaharan should be nominated for the peace award.
முன்னாள் பொரளி
கொடுங்கோ கொடுங்கோ சங்கரி ஐயாக்கு கொடுத்தீதிங்க இப்போ இவருக்கு அடுத்து அம்மானுக்கு அங்கால டக்ளசுக்கு அப்படியே எனக்கும் எதாவது பார்த்து.
U OF Jaffna
//உலகின் மிகமோசமான பயங்கரவாத அமைப்பிற்கும்(புலிகள்)>அங்கீகாரமளிக்கப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கும் இடையில் நின்று மனித உரிமைகளுக்காக களத்தில் பணியாற்றிய துணிவு அபாரமானது// தக்சன்
இவர்களின் ‘களம்’ என்று எதை சொல்கிறீர்கள்?
Sethurupan
இவர்கள் இருவரும் நோர்வே வந்தால் பொலிசாரால் கைது செய்யபடலாம். காரணம் சேதுருபனுக்கு மட்டும்தான் தெரியும்.
மகுடி
சேதுருபன்,
ஏன் வாரவங்களுக்கோ இல்லையென்றால் வீஸா குடுக்கிற எம்பஸிக்கோ தெரியாதோ? சேது , சும்மா சுப்பிலி ஆட்டம் ஆடாதேங்கோ. உங்களுக்கு எத்தனை தலை சேது?
sethurupan
அவர்கள் அவர்களுடைய அமைப்பின் அறிக்கையில் பகிரங்கமாக பாரதூரமான குற்றச்சாட்டை சுமத்தினர் இத தொடர்பாக நோர்வெயில் பொலிஸ் முறைப்பாடு இவர்களுக்கு எதிராக இருக்கு ஆகவே இவர்கள் நோர்வெ வந்தால் குறித்த வளக்கு விசாரனைக்கு வரும்.
பார்த்திபன்
நீங்ககள் பலபேர் பிரைச்சினைப் பட்டுக் கொண்டிருப்பதால், நான் சமாதானத்துக்கான விருதை ஒபாமாவுக்கு கொடுக்கச் சொல்லி அறிவிச்சிட்டன்.
பார்த்திபன்
சேதுரூபனையே நோர்வே அரசு உலாவ விடடிருக்கும் போது, மற்றவர்களுக்கு பிரைச்சினை என்பது சும்மா..மா..மா..மா……..
பல்லி
சேது அது எங்களுக்கும் தெரியும்; அதேபோல் தங்களை கைது செய்ய தங்களால் பாதிக்கபட்ட பலர் தொடராக நிற்ப்பது தமக்கு தெரியவில்லையா?நோர்வேயின் பொட்டராக இருந்தகாலம் அது, இப்போது சின்ன மாற்றம்தான், அதுக்காக எல்லோரும் பல்லிபோல் மறப்போம் மன்னிப்போம் என இருப்பார்களா? பார்த்திபன் அதை வேண்டி பின்லாடனிடம் கொடுங்கோ சொல்லிபுட்டன்; பின்பு பல்லி சொல்லவில்லை அதனால்தான் ஒபாமாவுக்கு கொடுத்தேன் என முட்டிமோத வேண்டாம்; அது சரி அப்படி என்னதான் கொடுத்து வாங்கிறியள்;
suji Navaratam
It is a crocodile tears.
If you fellow the news and analysis of Srilankan situation since the end of war “agains LTTE terroriste”.
The world and regional great powers are seriously confronting each other by defending and blaming Rajapaksa gouvernment. What is express really their concerns on human rights violation against Rajapaks Gouvernement.Is that their real interest. if anyone think EU and US and other forces are interested in human rights,one should fool himself. Their real interest is how to keep their dominant role in that geo strategically important island.
We can see since the end of war,Srilanka thanked to Chinana and India and refuse to react toward the interest of EU and US.After the end of LTTE,they have only one card against Rajapaks gouvernement who acted according China interest,that is “violation against Human rights”. EU and US powers know well since Rajapaks came to power he acted and did humain rights violation.They supported their war against Tamils by blaming ‘LTTE terrorist’ now,they are acting as Saints.
what is really express this Nobel price selection of two Tamil authors who wrote against all humain right violation since long time.Rajan Cool politicaly support to Indian domination or invation to solve this problem,these people are selected by EU power to give pressure to Rajapakse gouverment to accept and act according their own interest but not China.
what we have to learn from this?The world’s powers manuwering today political situation to their own interest.The great danger to humanity still remains in their brutal mouve against each other toward world dominaiton.The isaland will be a another battle ground of world powers.The time is coming to take an independant view toward the interest of humanity against world,reginal powers and our own gouverments.
முன்னாள் பொரளி
இவர்களின் ‘களம்’ என்று எதை சொல்கிறீர்கள்?/ U OF JAFFNA
எனக்கு தெரிய யாழ்ப்பாண கம்பசில்சேவையில் இருக்கும் காலத்தில் புலிகளுடன் முரண்பட்டுக்கொண்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறி உள்ளனர் முன்பு சந்திரிகாவின் காலத்தில் கதிர்காமருடன் இணைந்து புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் கதிர்காமரின் மறைவின்பின் உலக நாடுகளில் புலிகள்மீதான தடைக்கு முக்கிய பங்காளிகள் இன்று அதற்கு அறுவடை செய்கிறார்கள். விடுங்கள் இதை பெரிசுபடுத்திகொண்டு இவர்கள் மக்களுக்கு ஏதவாது சேவை செய்திருந்தால் தெரியப்படுத்தவும்.