தமிழகத்தில் சிதம்பரத்தை பிறப்பிடமாகக் கொண்ட வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ள அவருக்கு வேதியல் பிரிவுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ரிபோசோம் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு தொடர்பில் அவர் செய்த ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மற்றோரு அமெரிக்க விஞ்ஞானிக்கும், இஸ்ரேலிய விஞ்ஞானிக்கும் இதே பிரிவுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.