தவறான போராட்ட வழிமுறைகள் தமிழ்பேசும் மக்களுக்கு அழிவையே தந்தது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து

duglas.jpgகடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தவறான போராட்ட வழிமுறைகள் தமிழ்பேசும் மக்களுக்கு அழிவைத் தான் பெற்றுத் தந்துள்ளது என்பதனை இன்று அனைவரும் உணரக்கூடியதாக உள்ளது. ஆகவே மக்களின் விமோசனத்திற்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துச் சேவையாற்றும் அரசியல் தலைமைகளை இனங்கண்டு அவர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலமே தமிழ்பேசும் மக்களின் எதிர்காலம் நிரந்தரமானதாகவும் நிம்மதியானதாகவும் அமையும் என சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்

யாழ்.மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றியத்தின் 11 ஆவது ஆண்டு விழா யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றியத்தின் செயலாளர் திரு.செல்வராஜா தலைமையில் இன்று (06) நண்பகல் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

முன்பள்ளி ஆசிரியர்களின்  பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மூன்று முதல் ஆறு மாத காலத்திற்குள் மேற்கொள்வேன். முன்பள்ளி ஆசிரியர்கள் இந்த ஒன்றியத்தின் மீது நம்பிக்கை வைத்துச் செயற்பட வேண்டும்

மாகாண சபைக்கு ஊடாகவும் மாகாணக் கல்வியமைச்சின் மூலமாகவும் வடமாகாண ஆளுநருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதன் ஊடாகவும் முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

அடுத்து வரும் ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக இருப்பதினால் உங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான திறவுகோல் உங்கள் கைகளிலேயே இருக்கின்றது. சரியான ஜனநாயகத் தலைமைக்கு வாக்களிப்பதன் மூலமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.

வரப்போகும் காலங்களில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்த முன்வர வேண்டும் அதனால் எதிர்காலம் நிரந்தரமானதாகவும் நிம்மதியானதாகவும் அமையும் என்றார்

முன்பள்ளி ஆசிரியர்களில் சேவை மூப்பு அடிப்படையில் யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட  முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களையும் பரிசில்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்

Show More
Leave a Reply to param Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • param
    param

    /மக்களின் விமோசனத்திற்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துச் சேவையாற்றும் அரசியல் தலைமைகளை இனங்கண்டு அவர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலமே தமிழ்பேசும் மக்களின் எதிர்காலம் நிரந்தரமானதாகவும் நிம்மதியானதாகவும் அமையும் என சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்//

    அப்படியென்றால் உங்களுக்கே இன்னமும் அதில் தெளிவில்லை என்று ஒத்துக் கொள்ளுறீங்கள்.

    Reply