கொழும்பு பங்குச் சந்தை உலகின் சிறந்த பங்குச் சந்தையாக விளங்குவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்றைய முன் தினம் (05) இந்தப் பங்குச் சந்தையின் முதலீட்டுத் தொகை வரலாற்றில் என்றுமில்லாதவாறு முதற்தடவையாக 994.5 பில்லியன் ரூபாவாக அதிகரித்துக் காணப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
பங்கு நிலைவரங்கள் 106.1 வீதத்தால் அதிகரித்துள்ளது.
மிலங்கா விலைச் சுட்டெண் 3508.7 ஆகக் காணப்பட்டதுடன் அதன் அதிகரிப்பு வீதம் 115.1 எனவும் தெரிவிக்கப்படுகிறது.