தமிழ் நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் கருணாநிதி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந் நிலையில், சிதம்பரம். தமிழக முதல்வரை சென்னையில் சந்தித்துப் பேசியுள்ளார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து முதல்வருடன் கலுந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீள் குடியேற்றம் செய்வது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா ஆகியோருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Gamini Dullewe
Mr,chidamparam you are very big capitalist in india.you and congress pary is same.please asked from Sonia.srilanka refugees created by you.
Mr chidamparam you and mr.kurnanithi are two unwanted minister to tamil nadu. please do not talk about srilankan tamils.
Hopefuly they will give the Citizenship to all the tamils… That will be so kind of them… Sri Lanka will be very grateful to India…Thank You…
பல்லி
புலம்பெயர் தேசத்திலேயே அதேநாட்டு குடியுரிமை பெற இரவுபகலாய் கனவு கானும்போது அந்த அப்பாவிமக்களும் இந்திய குடியுரிமை கிடைத்தால் மகிழ்ச்சியாகதான் இருக்கும் என பல்லி நினைக்கிறேன்; கருனானிதி பேசகூடியவர், சிவசிதம்பரம் செயலாற்றல் மிக்கவர் அகையால் நல்லதே நடக்கும் என நம்புவோம்;
appu hammy
INDIA is very keen in srilanka to do bussiness. please give the fishing to india.they will do better job than srilanka.
Thaksan
பல்லி உங்கள் விருப்பத்தை முற்றாக மறுக்கிறேன். இலங்கை தேசத்து மக்கள் தாங்களாக விரும்பி இந்தியாவிற்பகு அகதிகளாக சென்றவர்களில்லை. (மேற்கு மற்றும் கனடா> அவுஸ்திரேலியா நோக்கி சென்றவர்களில் 90 வீதமானோர் பொருளாதார அகதிகள் (பணம் ஈட்ட ஈழ பிழச்சனையை பாவித்துக் கொண்டவர்கள்) என்பதை நீங்கள் மறுதலிக்க மாட்டீர்களென நம்புகிறேன்). ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை தருவதென்பதும் அதனை ஏற்றுக்கொள்வதென்பதும் இந்த மண்ணில் இன்றும் நம்பிக்கையுடன் வாழும் மக்களை அவமதிப்பதாகும். இந்த மண்ணல் இனி தமிழர் என்றொரு இனம் இருக்கத் தேவையில்லை என்ற முடிவிற்கே இது இட்டுச் செல்லும். இன்னமும் சற்று அதிகமான அளவு நெருக்குதல்களை கொடுத்தால் எஞ்சியிருக்கும் தமிழர்களும் இந்தியா நோக்கி சென்று விடுவார்களென்ற நம்பிக்கையை சிங்கள பேரினவாதிகளுக்கு கொடுக்கும் முயற்சியே இது. எங்களை எங்கள் அடையாளங்களுடன் இங்கே வாழவிடுங்கள். தயவு செய்து வரலாற்று தவறுகளுக்கு துணை போகாதீர்கள். எங்கள் தந்தையர் வாழ்ந்த இந்த மண்ணில் எங்கள் அடையாளங்களை இழக்காமல் எந்த இடரையும் தாங்கும் வலிமையுடன் நாங்கள் வாழ்ந்து மடிய விரும்புகிறோம். எங்கள் சந்ததியும் இந்த மண்ணில் வேரோடும். சாதி > மதம்> இனம் என்ற வேறுபாடுகளை கடந்து மனிதர்களாக நாங்களும் மாற்று இனத்தவர்களும் இந்த மண்ணில் வாழும் காலம் இன்னும் தொலைவிலில்லை. மானுடத்தை மட்டுமே நேசிக்கும் மனிதர்களாக நாங்கள் மாறுவோம். இல்லையேல் மாற்றுவோம்.
பல்லி
தக்சன், உங்கள் கருத்தை நானும் ஒரு ஈழ தமிழனாய் மதிக்கிறேன், ஆனால் அகதி என்றால் என்ன என்பதை அங்கு சென்றபோதுதான் என்னால் உனர முடிந்தது, அதனால் சிலகாலமாவது அவர்கள் அந்த அகதி என்னும் பதவியை துறந்து மனிதனாய் வாழ அந்த குடியுரிமை வழி வகுக்காதா ? என்னும் நப்பாசையில்தான் அதை எழுதினேன் அது யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும், எம்மண்ணில் நாம் வாழவேண்டும் என்பதில் பல்லிக்கும் பல கனவுகள் உண்டு, அதுவெல்லாம் கனவாய் போய்விடுமோ என்னும் பயமும் பலமாகவே உண்டு,
பார்த்திபன்
இன்று தமிழகத்தில் வாழும் அகதிகளை விட ஏனைய நாடுகளில் அகதிகளாக வாழ்ந்த எம்மக்களே அதிகம். அதில் பெரும்பகுதியினர் அந்தந்த நாடுகளில் பிரஜா உரிமைகளை எடுத்து விட்டனர். அப்போது வராத ஆலோசனைகள் எல்லாம் இப்போ தமிழகத்திலுள்ள மக்களின் பிரஜாயுரிமை விடயத்தில் வருவது தான் ஆச்சரியமானது. இவ்விடயத்தைப் பொறுத்தவரை தமிழகத்திலுள்ள அந்த மக்களே சுயமாக முடிவெடுப்பதே சிறந்தது.
Thaksan
அகதிகளாக இங்கிருந்து வெளியேறி(அது எந்த காரணத்திற்காக இருந்தாலென்ன) வேறொரு நாட்டு பிரஜாவுரிமையை விரும்பிப் பெற்றவர்கள் இங்குள்ள மக்களையும் பிறிதொரு நாட்டிற்கு செல்ல துர்ண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவது இங்குள்ளவர்களின் நம்பிக்கையை சிதைப்பதுடன் இந்த மண்ணில் இனி தமிழினம் வாழ வேண்டாமென கருதுபவர்களாகவே எனக்கு படுகிறது. இது அவர்களின் விரக்தியின் வெளிப்பாடாக இருக்கலாம். ஆனாலும் வரலாறு முன்நோக்கியே எப்போதும் சென்றுகொண்டிருக்கும். நாம் விட்ட தவறுகளே இன்று நாம் தோற்றுப்போய்விட்டவர்களாக காரணமாகிவிட்டது. நாங்கள் அதர்மத்தை துதிபாடினோம். விளைவுகளை அறுவடை செய்கிறோம். இப்போது எதிரி அதர்மத்தை துதிபாட தொடங்க அங்கும் அதற்கான அறுவடையை அவன் எதிர்கொண்டேயாக வேண்டும்.ஆனால் தர்மம் தன் வழியில் ஜெயிக்கும். இயற்கை சமநிலை தளம்பாது தன்னை பார்த்துக்கொள்ளும். இல்லையேல் உலகம் எப்போதோ அழிந்திருக்கும். அதர்மத்தின் வெற்றிகள் எப்போதும் தற்காலிகமானதே. இதை உலகம் பல தடவைகள் கற்றுத் தந்துள்ளது. நாங்கள் (தனிமனிதர்கள்)மரணிக்கலாம். வரலாறு தன் வழியில் சரித்திரங்களை எழுதிக்கொண்டே இருக்கிறது. சரித்திரத்தை மனிதர்களே படைக்கிறார்கள். என்றாலும் நியாயங்களை கேள்விக்குட்படுத்தும் சரித்திரங்கள் மனுக்குலத்தின் படிப்பினைக்காகவே மீட்கப்படுகின்றன.