நாட்டுக்குத் தேவையான முழுமையான அபிவிருத்தியையும், தேசிய முன்னேற்றத்தையும் உருவாக்க வேண்டிய பொறுப்பை நாம் இன்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். உலகிலேயே மிக மோசமான பயங்கரவாதிகள் என வர்ணிக்கப்பட்டவர்களுக்கு எதிரான யுத்தத்தில் படையினரின் வீரத்தைக் கண்ட எந்தவொரு அறிவுள்ளவரும் நாட்டைத் துண்டாட வேண்டும் என்றோ பிரிவினைவாதத்திற்காக ஆயுதம் ஏந்த வேண்டும் என்றோ நினைக்கமாட்டார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இராணுவத்தின் 60வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இராணுவத்தினரின் கண்காட்சி ஒன்று நடைபெறுகிறது. இதன் ஆரம்ப வைபவம் நேற்று நடைபெற்றது. இதில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உயிர்த்தியாகம் செய்த சகல படையினரும் உலகத்தில் ஈடிணையற்ற வீரர்கள் என்ற பெருமையை பெற்றுக் கொண்ட நிலையிலேயே இன்றைய 60 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறோம். உலகில் ஈடிணையற்ற வீரர்கள் என்ற பெருமை நாம் பெற்ற வெற்றியினூடாகவே ஏற்பட்டுள்ளது.
ஆசியாவிலுள்ள சகல நாடுகளும் நாம் பெற்ற யுத்த ரீதியான வெற்றி தொடர்பாக ஆராய்ந்து வருகின்றன.
உலகம் கண்டிராத மிலேச்சத்தனமான தாக்குதல் முறைகளை பயங்கரவாதிகள் உலகுக்கு காண்பித்துக் கொண்டிருந்தனர். எனினும் எமது வீரர்கள் அவர்களுக்கு முகம் கொடுத்தது மட்டுமல்லாமல் வெற்றியும் கண்டார்கள்.
உலகில் பெரும்பாலும் இராணுவத்தினர் தாம் தயாரித்த நவீன ஆயுதங்களை, கண்காட்சிக்கு வைப்பதற்காக உற்சவங்களை நடத்துவார்கள். அணு ஆயுதங்கள் உட்பட, ஏனைய ஆயுதங்களையும் கண்காட்சிக்கு வைப்பது மட்டும் அல்லாமல் ஊர்வலங்களையும் நடத்துவார்கள். எனினும், பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்த த்தில் பெற்றுக்கொண்ட வெற்றியை நெஞ்சில் உரமாக சுமந்து கொண்டு கண்காட்சிகளை நடத்துவதற்கு உகந்தவர்கள் எமது இராணுவத்தினரே என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இக்கண்காட்சி 3ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
poor themulu
மகிந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை முதற்கட்டமாக புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க வேண்டும். அதன் பின்னர் அரசியல் ரீதியாக தமிழ் மக்களுடைய அரசியல் கோரிக்கையைத் துடைத்தழித்திட விட வேண்டும்.
அதேவேளை இவ்வாறான அரசியலுரிமைக் கோரிக்கைகள் ஏனைய சிறுபான்மையினங்களான முஸ்லிம்களிடமிருந்தோ மலையக மக்களிடமிருந்தோ மேற்கிளம்பாதவாறான சூழ்நிலைகள் உருவாக்கப்படல் வேண்டும். அது மட்டுமல்லாமல் சிங்கள மக்களிடமிருந்தும் கூட ஜனநாயகக் குரல்கள் எழா வண்ணம் அந்த சக்திகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும், பலவீனப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மிகத் திட்டமிட்டுச் செயற்படும் ஒரு அரசாங்கமாக இருக்கிறது.
பல்லி
ஜயா என்னும் ஒரு நாலு இடைதங்கல் முகாம் உருவாக்குங்கோ, அதை காட்டி சர்வதேசத்திடம் பிச்சை கேழுங்கோ; அவர்களும் பரிதாபப்பட்டு போடுவார்கள், அதை எடுத்து அபிவிருத்தியோ அல்லது அடுத்த விருத்தியோ செய்யுங்கோ, அதை பற்றி சர்வதேசம் கேட்டால் உங்க தம்பியை அல்லது யாப்பாவை விட்டு சண்டிதனம் பேச சொல்லுங்கோ;
//உலகம் கண்டிராத மிலேச்சத்தனமான தாக்குதல் முறைகளை பயங்கரவாதிகள் உலகுக்கு காண்பித்துக் கொண்டிருந்தனர். எனினும் எமது வீரர்கள் அவர்களுக்கு முகம் கொடுத்தது மட்டுமல்லாமல் வெற்றியும் கண்டார்கள்.//
உன்மைதான் புலிகளின் கிளிநொச்சி கட்டளை தளபதி நேரடிபோரில் கொல்லபட்டார் அவரது உடல் எமது ராணுவத்தால் கைப்பற்றபட்டது என தம்பி நாணயகாரா போட்டோவுடன் போஸ்கொடுத்தார், ஆனால் ஜந்து மாதத்துக்கு பின் அதே நோணயகார சொல்லுகிறார் தீபன் ஆறுலட்ச்சம் கொடுத்து முகாமை விட்டு தப்பிவிட்டார் ஆனால் இலங்கையை விட்டு தப்பவில்லை என, ஆக இப்படி பல சமாசாரங்களையும் பார்வையுக்கு வையுங்கோ; அப்பதான் உங்கள் வெற்றியின் ரகசியம் சிங்கள மக்களும் புரிய உதவும்;
Gamini Dullewe
First is first How can you resettle refugee in a rush???