சுவிட் சர்லாந்தின் நட்சத்திர சைக்கிளோட்ட வீரர் பெபியன் கென்சல்ரா, சொந்த மண்ணில் சம்பியன் பட்டம் வெல்லும் அரிய வாய்ப்பை நழுவவிட்டுள்ளார். உலக சைக்கிளோட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில் பெபியன் கென்சல்ரா ஐந்தாம் இடத்தையே பெற்றுக்கொண்டார். சுவிட்சர்லாந்தின் மென்டிரிசோ பகுதியில் இந்தப் போட்டி நடைபெற்றது.
அவுஸ்திரேலிய வீரர் கடெல், எவன்ஸ் 262.3 கிலோ மீற்றர் ஓட்ட தூரத்தைக் கடந்து சம்பியன் பட்டம் வென்றுள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த அலக்சாண்டர் கொல்ப்நோவ் இரண்டாம் இடத்தையும், ஸ்பெய்னைச் சேர்ந்த ஜோக்கின் ரொட்ரிகஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெபியன் கென்சல்ரா பிரகாசிக்கத் தவறியமை உள்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த வாரம் நடைபெற்ற டைம் ட்ரயல்ஸ் போட்டிகளில் கென்சல்ரா முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
13 வருடங்களுக்குப் பின்னர் உலக சைக்கிளோட்ட சம்பியன்ஷிப் போட்டிகள் சுவிட்சர்லாந்தில் முதல் தடவையாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.