அமெரிக்கா உட்பட சில நாடுகள் இலங்கையை போர்க் குற்ற நாடாக பிரகடனப்படுத்த முயற்சி – விமல்

280909vimal.jpgசர்வதேச மட்டத்தில் இலங்கையை ஒரு போர்க் குற்ற நாடாக பிரகடனப்படுத்தி விட வேண்டும் என்பதில் புலிகளுக்கு ஆதரவான அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கட்சித் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே விமல் வீரவங்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்

புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர் என்ற வேதனையிலே இவ்வாறு இந்த நாடுகள் செயற்படுகின்றன. விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றத் துடிக்கும் சர்வதேச சக்திகளின் சதித் திட்டங்களை முறியடிப்பதற்கு அனைவரும் அணி திரள வேண்டும். அத்துடன் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றுக்கு எமது கட்சி தயாராகி வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • Kumara Ekanayake
    Kumara Ekanayake

    we must fight against violations laws. but I dont know whether JVP has the right to talk on this subject as we can not forget what happend during 1988 and 1989 period.

    Reply
  • pannda
    pannda

    Wimal is great.He speaks nicely. He is my favourite politician.His expressions are really great and some times fuuny.He express his views nicely.

    Reply
  • appu hammy
    appu hammy

    This man talks as if he has the mighty power to do anything. He comes from a species that doesn’t understand what power means. Beside he talks of the West. All his speeches are anti-West and why is he suddenly putting a U turn. Has he become an angel with something promised. After the break away of his party he is now prepared to worship the shadow of the President. In this situation how can he resist the Big Man.

    Reply
  • sumi
    sumi

    இலங்கை அரசுக்கும் சேகுவேரா என்ற சிங்கள இளையோர் அமைப்புக்கும் நடந்த போரின்போது பல்லாயிரக்கணக்கானவர்கள் அன்றைய அரசினால் அநியாயமாக கொல்லப்பட்டு வீதியோரங்களில் கூட எரிக்கப்பட்டார்கள். அச்சமயம் இந்த ஐ.நா.வோ அல்லது மனித உரிமை அமைப்புகளோ இருக்கவில்லையா? 17 வருட காலமாக நடந்த யு.என்.பி. ஆட்சியில் எத்தனையோ மனித உரிமை மீறல்கள், 1983 ல் இனப்படுகொலைகள். அப்பாவி தமிழர்கள் வீதிகளில் எரிக்கப்படவில்லையா? தமிழர்கள் தெற்கிலிருந்து விரட்டப்படவில்லையா? 1990 மன்னார் மாவட்டத்தில் யு.என் எச்.சி.ஆரின் பாதுகாப்பில் பேசாலை அகதிமுகாமில் வசித்துவந்த பல அகதிகள் பிடிக்கப்பட்டு கொல்லப்படவில்லையா? இக்காலத்தில் இன்னும் எத்தனையோ மனித உரிமை மீறல்கள். அப்போது இந்த ஐ.நா. என்ன செய்தது? ஏன் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை புலிகள் உடுத்திய உடுப்புடன் சொந்த மண்ணிலிருந்து விரட்டியபோதும், சந்திரிக்காவின் ஆட்சியில் செம்மணி விடயம்? மகிந்த மட்டும்தான் குற்றவாளியா? இது ஐ.நாவா or பொய் நாவா??

    Reply
  • பல்லி
    பல்லி

    அண்ணன் கெடுத்தான் என்பதுக்காக தம்பியும் கெடுக்க வேண்டுமா என்ன? அல்லது அண்ணனிடம் கெட்டுபோனதால் தம்பியிடமும் கெட்டு போக நினைக்கலாமா?? குழப்பமாக இருக்கா? விரிவாக மேலே உள்ள பின்னோட்டத்தை கவனிக்கவும்,

    Reply