கிண்ணியா தள வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இரவு நோயாளியின் உறவினர்களுக்கும், ஆண் தாதிகளுக்கு மிடையே ஏற்பட்ட கைகலப்பில் காயம டைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருச் சிதைவு ஏற்பட்ட பெண்மணி யொருவரை கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக சென்றபோது அங்கு எந்தவொரு வைத்தியரும் கடமையில் இருக்கவில்லை.
இந்நோயாளி பின்னர் தனியார் மருத்துவ நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு போதிய வசதியின்றி மீண்டும் மருத்துவமனையில் மயக்க முற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதும் வைத்தியர்கள் இருக்கவில்லை.
இந்நிலையில், நோயாளியின் உறவினர்களுக்கும் அங்கு கடமையிலிருந்த ஆண் தாதிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நோயா ளியின் உறவினர் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.