இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதி வோல்ட்டர் கேலின் நேற்று மாலை வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் செய்த அங்கு முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகளை பார்வையிட்டார்.
இன்று சனிக்கிழமை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின்போது, இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு அரசாங்கம் செய்துகொடுத்துள்ள வசதிகள், மீள்குடியேற்றம், நிலக்கண்ணி வெடி அகற்றல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த புதன்கிழமை இலங்கை வந்த வோல்டர் கேலின் நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டார்.