வடமேல் மாகாணசபை உறுப்பினர் சோமா குமாரி தென்னக்கோனின் இறுதிக் கிரியை இன்று நிக்கவரெட்டிய பொலிஸ் மைதானத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இவரது பூதவுடல் நிக்கவரெட்டியவிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இவர் அம்பாந்தோட்டையில், தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட இதயவலி காரணமாக மரணமடைந்தார்.
இவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மகளிர் அமைப்பில் திறமைமிக்க உறுப்பினராகச் செயல்பட்டவராவார். அத்துடன் குருநாகல் மாவட்டத்தின் மகளிர் அணியின் வெளிக்களத் தலைவராகவும் கடமையாற்றியவர். வடமேல் மாகாண சபையின் உறுப்பினராக அரசியலில் காலடி எடுத்து வைத்த சோமா குமாரி, நாடாளுமன்ற மட்டத்தில் சேவையற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.