சபையில் கோரமின்மையால் (சபையை நடத்த போதிய உறுப்பினர்கள் இன்மையால்) ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பிக்க முடியாமல் போனது.
நேற்று பகல் 12.30க்கு சபை நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைக்குமாறு பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்தார்.
பிரேரணையை சமர்ப்பிக்க தயாரான போது போதிய உறுப்பினர்கள் இல்லாமையை சுட்டிக்காட்டி கோரம் மணியை ஒலிக்கச்செய்யுமாறு அமைச்சர் லசந்த அழகியவண்ண கோரினார்.
கோரம் மணி ஒலித்த சில நிமிடங்களில் உறுப்பினர்கள் சபைக்குள் வந்தனர். மீண்டும் பிரேரணையை சமர்ப்பிக்க முற்பட்ட போது பிரதி அமைச்சர் ஹுசைன் பைலா கோரமின்மையை சுட்டிக்காட்டினார்.
ஐந்து நிமிடங்களாக சபைக்குள் உறுப்பினர்கள் வராததால் பிரதி சபாநாயகர் பிரியங்க ஜயரட்ன சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.