வட மாகாணத்திலிருந்து (1990ம் ஆண்டு) இடம்பெயர்ந்து முகாம்களிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் வாழ்ந்து வருகின்ற மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
மீளக்குடியேறவிருக்கும் மன்னார் மூர்வீதி மக்கள் தொடர்பான விபரங்களை மீள்குடியேற்ற அமைச்சிற்கு உடனடியாக சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் இவ்விடயம் சம்பந்தமாக மன்னார் மூர்வீதி மக்களுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டு முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்கு சமூக மேம்பாட்டுக்கான அமைப்பு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு இலக்கம், 126/1 ஏர்னோல்ட் ரட்நாயக்கா மாவத்தை, கொழும்பு-10 (டீன்ஸ் றோட் சந்தி) யுனிக் சர்வதேச பாடசாலையில் இதற்கான கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதால் இந்த கலந்துரையாடலில் அனைத்து மன்னார் மூர்வீதி மக்களம் தவறாது கலந்து கொள்ளுமாறு அமைப்பினர் கேட்டுள்ளனர்.
இதன்போது, மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சால் கோரப்பட்ட விண்ணப்பப் படிவங்களும் வழங்கப்படவுள்ளது. கீழ்வரும் தொலைபேசிகளுடன் தொடர்பு கொண்ட மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென அமைப்பினர் கேட்டுள்ளனர். தொலைபேசி இல: 0774162311, 0773223930, 0714293668, 0777330928