நியூ யார்க்கில் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட உலகின் 100 முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் சுற்றுப்புற சூழல் குறித்த ஐ.நா. மாநாட்டில் இந்தியாவை சேர்ந்த 13 வயது சிறுமி பங்கேற்றுப் பேசவுள்ளார். அவரது பெயர் யுக்ரத்னா ஸ்ரீவஸ்தவா. லக்னோவில் உள்ள புனித பிடலிஸ் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் நாளை நடக்கும் கூட்டத்தில் அவர் மூன்று கோடி இளம் குழந்தைகளின் சார்பாக புவி வெப்பமாதல் குறித்து பேசவிருக்கிறார்.ஐநாவின் சுற்றுப்புற திட்டமிடுதல் அமைப்பின் இளைஞர்களுக்கான அங்கமான துன்சாவின் இளம் ஆலோசகராகவும் இருக்கிறார் யுக்ரத்னா.
இந்த கூட்டத்துக்கு ஐநா பொது செயலாளர் பான் கி மூன் தலைமை தாங்குகிறார்.