ஐ. நா. பொதுச் சபையின் 64 ஆவது கூட்டத் தொடர் நாளை நியூயோர்க்கில் ஆரம்பமாகிறது. இதில் இலங்கையின் சார்பில் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தலைமையிலான உயர்மட்டக் குழு கலந்துகொள்ளும்.
பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க எதிர்வரும் 26ம் திகதி பொதுச் சபையில் உரையாற்றுவார். சர்வதேச சமாதானம், பாதுகாப்பு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்துவதும் எனும் தலைப்பில் பிரதமர் உரையாற்றுவார்.
இந்த விஜயத்தின்போது ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்தித்துப் பேசவுள்ள பிரதமர், நியூயோர்க்கில் ஆசிய சமூகத்தினரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
இலங்கை முன் உள்ள சவால்கள்: புலிகளின் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின் சமாதானத்தை உறுதிப்படுத்துதல் எனும் தலைப்பில் ஆசிய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் உரையாற்றுவார். பிரதமருடன் அமைச்சர் ரோஹித போகொல்லாகம மற்றும் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகளும் இந்த விஜயத்தின்போது கலந்துகொள்கின்றனர்