35 கிலோ எடையுள்ள அதிசக்திவாய்ந்த சி-4 ரக வெடிமருந்துகள், இரண்டு தற்கொலை அங்கிகள், 25 கிலோ எடையுள்ள இரும்பு குண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளனர். முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இராணுவத்தினரும், சி. ஐ. டி. யினரும் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின் போதே இந்த பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் சுதுமலை பிரதேசத்தில் இராணுவத்தின் 52வது படைப் பிரிவினர் நடத்திய தேடுதல்களில்; 5 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த தற்கொலை அங்கிகள் – 02, குண்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 10 கிலோ எடையுள்ள சிறிய இரும்பு குண்டுகள், 15 கிலோ எடையுள்ள நடுத்தர இரும்பு குண்டுகள், 10 கிலோ எடையுள்ள சி-4 ரக வெடிமருந்துகள், 2 கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டுகள், ரேடியோ தொலைத் தொடர்பு கருவிகள் – 08, கைக்குண்டுகள் – 08, செய்மதி தொலைபேசிகள் – 02, ரி – 56 ரக துப்பாக்கி ரவைகள் – 155, வெடிக்க வைக்கும் கருவிகள் மற்றும் பெருந்தொகையான பொருட்களை மீட்டெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு, நரகமுல்லை பிரதேசத்தில் சி. ஐ. டி.யினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட பாரிய தேடுதல்களில் 25 கிலோ எடையுள்ள சி-4 ரக வெடிமருந்துகள், பல்குழல் துப்பாக்கி ரவைகள் – 10, புலிகளால் தயாரிக்கப்பட்ட பல்வேறு குண்டுகளை கண்டெடுத்துள்ளனர்.
இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவத்தின் மூன்றாவது அதிரடிப் படையினர் நடத்திய தேடுதல்களில் பிஸ்டல் துப்பாக்கிகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் ரவைகள் – 50, 12.7 மி. மி. ரவைகள் – 850, 81 மி.மீ. மோட்டார் குண்டுகள் மற்றும் உபகரணங்களை மீட்டெ டுத்துள்ளனர் என்று பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.
abeya singee
so that means threat is still there. then what is the use of saying the terror is eradicated. and by the way, are we not sick of this now? i guess they will be recovering weapons till the rest of their lives.
Of course, if the Police themsleves keep it and then collect for there own benefit, it will continue.
palli
நிதானமாக பாருங்கள் அது எம்மவரின் எலும்பு கூடாக இருக்கலாம், இரு மிருகங்களும் புதைத்தார்களல்லவா?