அரசியல மைப்பின் 13வது திருத்த சட்டத் தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு அதி காரங்கள் வழங்கப்பட்டிருந்தபோதிலும் அவற்றை செயற்படுத்தும் போது பல்வேறு தடைகள் ஏற்பட்டு உள்ளன. அவற்றை தீர்ப்பதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்தார்.
மாகாண முதலமைச்சர்களின் மாநாடு நேற்று (19 ஆம் திகதி) ஹபரண விலேஜ் ஹோட்டலில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில், மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமேல், வடமத்திய, கிழக்கு ஆகிய ஏழு மாகாண சபைகளினதும் முதல மைச்சர்கள் மாகாண சபைகளின் பிரதான செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து உரைநிகழ்த்திய மாகாண முதலமைச்சர்: மாகாண சபைகள் மூலம் பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஆனாலும் மத்திய அரசாங்கத்தினால் அதற்குத் தேவையான நிதி வழங்கப்படா மையினால் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த முடியாமல் உள்ளது. இவ்விடயம் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் கவனத்திற்கு கொண்டு செல்ல ப்பட்டுள்ளது. அவற்றைத் தீர்ப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி சம்பந்தமான அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளன. காணி சம்பந்தமான அதிகார ங்களில் சில பிரச்சினைகள் உள்ளன. பொலிஸ் அதிகாரம் பற்றி தற்போது எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படுவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.