ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோ கொழும்பு வந்தடைந்துள்ளார். இங்கு அவர் இரண்டு நாட்கள் தங்கியிருந்து போருக்கு பின்னரான சூழல் குறித்து அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இன்று வியாழக்கிழமை அவர் வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களுக்கு செல்லவுள்ளார். அரசுடனான பேச்சுவார்த்தைகளின் போது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றம் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. அது தொடர்பில் விரைவான ஒரு நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்க்கிறது.