ஈரானுடன் நடத்தப்படவுள்ள பேச்சுவார்த்தைகள் துருக்கியில் நடைபெறும் என ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கான தலைவர் ஜாவியர் சொலனா தெரிவித்தார். பெரும்பாலும் இப்பேச்சுக்கள் ஒக்டோபர் 01ம் திகதி ஆரம்பமாகும். யுரேனியம் செறியூட்டல் வேலைகளுடன் அணுஆயுதங்களை விருத்தி செய்யும் ஈரானின் முயற்சிகளில் மேற்கு நாடுகள் அச்சம் கொண்டுள்ளன.
இவை பற்றித் தெளிவான விளக்கங்களை ஈரான் இப்பேச்சுவார்த்தையின் போது வெளியிடும். உலக வல்லரசு நாடுகளின் பிரதிநிதிகளும் ஈரான் பிரதிநிதிகளும் இப் பேச்சுக்களில் பங்கேற்பர். பேச்சு நடைபெறும் இடம்பற்றி இன்னும் இறுதி முடிவில்லை.