வெளிநாடு களிலிருந்து கிடைக்கப் பெற்ற நிதியினைக் கொண்டு பாரிய அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், இதன் மூலம் அந்த நிதி யாவும் மக்களின் சட்டைப் பைக்குள்ளேயே இடப்பட்டிருப்பதாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க கூறுவதைப் போல், வெளிநாட்டு நிதியை அரசாங்கம் பைக்குள் போட்டுக் கொள்ளவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் பெருந்தொகைப் பணத்தைப் பயன்படுத்தியுள்ளதாகவும் 2010 ஆம் ஆண்டில் நாட்டின் சகல குடியிருப் புகளுக்கும் 90% மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை (16) நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அபிவிருத்தி நிதி அரசின் ‘பொக்கெட்டு’ க்குப் போகவில்லை. சகல வீடுகளுக்கும் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும் வெளிநாட்டு நிதியே பயன்படுகிறது. ஐந்து துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படுகி ன்றன. 2007-2017 ஆண்டு வீதி அபிவிருத்திக்கென 484,378.5 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மேல், வட மத்திய, வட மேல், ஊவா மாகாண வீதி அபிவிருத்திக் கென கடந்த வருடம் 10671 மில்லியன் செல விடப்பட்டுள்ளது. மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய 298065 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த 154445 மில்லியன் ரூபாவும், கிராமிய உட்கட்டமைப்புகளை மேம்படுத் தவென 35717 மில்லியன் ரூபாவும் முதலீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார். துறைமுகங்களின் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக விபரங்களை யும் அமைச்சர் வெளியிட்டார்.