கைச் சாத்திடப்படவிருக்கின்ற கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 500 ரூபா சம்பள உயர்வு கோரியும் மலை யகத்தின் பல்வேறு தோட்டப் பிரதேசங்களிலும் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
அட்டன் – யுனிபீல்ட் வெலிங்டன், கிரிஸ்லஸ் பாம் தோட் டங்களிலும் கொட்டகலை டிரைட்டன், எதென்சைட், லொக் கில் தோட்டங்களிலும், தலவாக்கலை சென் என்றூஸ் தோட்டங்களிலும், பொகவந்தலாவை கொட்டியாகலை, பொகவானை, குயினா, கில்லானி, செல்வகந்தை, டின்சின் ஆகிய தோட்டங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.
பொகவந்தலாவை பகுதியிலுள்ள கொட்டியாகலை, பொக வானை, செல்வகந்த, குயினா ஆகிய தோட்டங்களில் தொழிலாளர்கள் முற்றாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், “எங்களை இரண்டு வருடத்திற்கு விற்காதே, அடிப்படை சம்பளம் 500 ரூபா கொடு, துரோ கத்திற்கு துணை போகாதே” போன்ற பதாதைகளை ஏந் திய வண்ணம் கோசங்களை எழுப்பினர். சிலர் கறுப்புப் பட்டிகளை அணிந்தும் கறுப்பு கொடிகளை காட்டியும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
ஒரு சில இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதனால் பதற்ற நிலை நிலவியது. பொலிஸார் தலையிட்டு சுமுக நிலைக்குக் கொண்டுவந்தனர்.