ஹிஜ்ரி 1430 ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை மறுதினம் (19) சனிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 6.09 மணி தொடக்கம் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொள்கின்றது.
அவ்வாறு ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 0112390783, 2432110, 2434651, மற்றும் 0777366099 தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்புகொண்டு அறி யத்தருமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பொதுச் செயலாளர் நதுஷான் ஹஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஸாவியாக்கள், தக்கியாக்கள் ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.