புத்தளம் நகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. ஆசிய பவுண்டேசனின் அனுசரணையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆரம்ப வைபவம் புத்தளம் நகர சபையின் உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.எம்.முஹ்ஸி தலைமையில் புத்தளம் நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
புத்தளம் நகர சபையின் பணிகள் குறித்து மக்களுக்கும், உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் கவனத்திற்கும் கொண்டு வருவதே இதன் முக்கிய நோக்கம்.
‘puttalamucp@yahoo.com’ என்ற முகவரியுடன் தொடர்பு கொண்டு புத்தளம் நகர சபையின் விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.