மன்னாரில் பெற்றோலிய ஆராய்ச்சியில் இந்தியாவின் அம்பானிக் குழுமம் ஆர்வம்!

oil_research.jpgமன்னார் பிரதேசத்தின் பெற்றோலிய ஆய்வு நடவடிக்கைகளில்  இந்தியாவின் முன்னணி வர்த்தக நிறுவனமான முகேஷ் அம்பானி குழுமத்தின் தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்துப்  பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்காக  முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவின் திசாநாயக்க நாளை மும்பாய் பயணமாகவுள்ளார்.

இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் இலங்கையில் பெற்றோலிய ஆய்வு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டிவருவதாகவும்  அதற்கான எண்ணெய் ஆராய்ச்சிப் பகுதிகள் மன்னார் மாவட்டத்தில் இனங்காணப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    வியாபாரி வரபோகும் துன்பங்களை சிந்திக்க மாட்டான், அதனால் கிடைக்கும் லாபத்தைதான் தேடுவான்; ஆனாலும் அம்பானி குடுமபத்துக்கு ஏற்க்கனவே மனைவிமாரால் ஏழரை பிடித்துவிட்டது; இது அட்டமத்துசனியை உருவாக்குவது போல்தான் பல்லிக்கு படுகிறது; பொறுத்து பார்ப்போம் அம்பானியா அல்லது அப்பாவி மக்களா என;

    Reply