ராஜிவ் சிலை உடைப்பு

நாகர் கோவில் அருகே முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் சிலை உடைக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் கூடி போராட்டம் செய்ய முயன்றதால் லேசான பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாகர்கோவில் அருகே வெள்ளமடம் சகாயநகரில் பகுதியில் நடந்துள்ளது.

இன்று காலை இப்பகுதியிலிருந்த ராஜீவ்காந்தி சிலையின் மூக்கு பகுதி உடைத்து தூண்டாக கிடந்தது. மேலும், தலைப்பகுதி தாக்கப்பட்டு, கீறல் விழுந்திருந்தது. இன்று காலை இதை கண்ட காங்கிரஸார் அதிர்ச்சியடைந்தனர். ராஜீவ்காந்தி சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரி  போராட்டம் நடத்த ஆயத்தமானார்கள்.

இதையடு்தது தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காங்கிரஸ் கட்சியினரை சாமாதனப்படுத்தினர். சிலை உடைப்பு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து காங்கிரஸார் போராட்டத்தை கை விட்டனர்.  இது குறித்து . போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • palli
    palli

    நளினியின் விடுதலைக்கு தறுதலை கூட்டம் ஒன்று வைத்து விட்டது ஆப்பு;

    Reply
  • Jeeva
    Jeeva

    பல்லி அவர்களே,
    நளியினியின் விடுதலைக்கும் ராஜீவ் சிலையின் மூக்குக்கும் முடிச்சா? இந்திய நீதித்துறை அவ்வளவு கேவலமா? ஆம் என்றால் வரவேற்கத்தான் வேண்டும்!

    Reply
  • palli
    palli

    ஜீவா பாதிக்கபட்டவர்களின் பரிந்துரை எந்த ஒரு கைதிக்கும் சிறப்பு மன்னிப்பு வழங்க நீதி துறைக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ உதவும் என படித்தவர்கள் (சட்டம்) சொல்லுகிறார்கள்; இது இந்தியாவுக்கல்ல உலகத்துக்கே சாருமாம்; இதை புரிந்து கொண்டு பல்லியின் பின்னோட்டத்தை
    படியுங்கள் அது முடிச்சல்ல முகப்புதான் என்பது புரியும்;

    Reply
  • jeeva
    jeeva

    பல்லி,
    நீங்கள் சொல்வது போல ‘பாதிக்கப்பட்டவ்ர்களின் பரிந்துரை’ தான் ஒருவரின் விடுதலையை தீர்மானிக்கவேண்டும் அன்றி ‘வெளியில்’ நிற்கும் ஒருவர் சிலையின் மூக்கை உடைப்பதலல்ல. அதுவே எனது கருத்தும்!

    Reply