தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பளவுயர்வை வலியுறுத்தி மலையக மக்கள் முனனணியின் ஏற்பாட்டில் அட்டனில் 13 ஆம் திகதி நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டப்போராட்டம் பொலிஸாரின் தலையிட்டினால் இறுதி நேரத்தில் இடம் பெறவில்லை.
இதனைத்தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரனின் தலைமையில் இந்த முன்னணியின் ஆதரவாளர்கள் அட்டன் நகரின் பிரதான வீதியில் வீதி மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணிநேரம் வாகனப்போக்குவரத்துக்கள் இடம் பெறவில்லை. இந்த நிலையில் அட்டன் பொலிஸாரால் கண்ணீர் புகை ஏற்படுத்தப்பட்டதாகத்தெரிவிக்கப்படுகின்றது.