இலங்கையர்களும் உள்ளடங்குவதாக சந்தேகிக்கப்படும் அரசியல் தஞ்சம் கோரியோர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்றை அவுஸ்திரேலிய கடற்படையினர் தடுத்து வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியல் தஞ்சம் கோரிய 83 பேரை ஏற்றிச் சென்ற இந்த படகு, அவுஸ்திரேலியாவின் அஸ்மோர் தீவுக்கு அருகில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகுடன், 83 அரசியல் தஞ்சம் கோரியவர்களையும், குறித்த படகோட்டிகள் நான்கு பேரையும் அவுஸ்திரேலிய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு அரசியல் தஞ்சம் கோரியவர்களை ஏற்றிச் சென்ற 20 வது படகே இன்று மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தற்போது கிரிஸ்மஸ் தீவில் உள்ள இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ப்ரண்டன் ஓ கோனர் தெரிவித்துள்ளார்.