சீனாவில் ஒரு வயதுடைய காங் மெங்ரூ என்ற பெண் குழந்தையின் வயிற்றில், இரட்டை சிசு உள்ள ஆபூர்வம் நடந்துள்ளது.
அக்குழந்தையின் வயிற்று பகுதி நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே போவதால், குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைக்கு காங் மெங்ரூவை கொண்டு சென்றனர். மருத்துவர்கள் குழந்தை பரிசோதனை செய்த போது, குழந்தையின் வயிற்றில் இரட்டை சிசு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோன்று வினோதமான நிகழ்வு 500,000 பிரசவத்திற்கு ஒரு முறை நடக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காங் மெங்ரூவிற்கு விரைவில் அறுவைசிகிச்சை நடக்க உள்ளது.