கிழக்கு உதயம் அபிவிருத்தித்திட்டத்திற்கென நிதி சேகரிக்கும் வகையில் சமாதான வாகன ஊர்வலம் நடத்தப்படவுள்ளது. தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சும் இலங்கை விமானப் படையும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.
இதற்கான அனுசரணையினை 4×4 எட்வன்சர் கழகம் மற்றும் ஜோன் கீல்ஸ் ஓட்டோ மேஷன் தனியார் நிறுவனம் வழங்குகின்றது. இதன் மூலம் கிடைக்கப்பெறும் நிதி திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள திவுல்வெவ கிராமத்தில் சகல வசதிகள் கொண்ட பாடசாலையொன்றை நிறுவப் பயன்படுத்தப்படும். புலிகளால் பாதிக்கப்பட்டு பல. இன்னல்களுக்கு முகம் கொடுத்த 160 குடும்பங்கள் தற்பொழுது இப்பகுதியில் மீளக் குடியமர்த்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மூன்று நாட்களாக நடைபெறும் இவ்வாகன ஊர்வலம், இம்மாதம் 19ம் திகதி காலை கொழும்பிலிருந்து ஆரம்பமாகி, அவிசாவளை, இரத்தினபுரி, பெல்மதுளை, எம்பிலிப்பிட்டி ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம ஊடாக அறுகம்பே சென்றடையும். முதல்நாள் இரவை களிப்பதற்கென அறுகம்பே கடலோரப் பகுதியில் முகாமொன்று அமைக்கப்படும். இரண்டாம் நாள் ஊர்வலம், பொத்துவில், கோமாரி, திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை, காத்தான்குடி, ஏறாவூர், பாசிக்குடா, மூதூர் மற்றும் கிண்ணியா ஊடாக திருகோணமலை சென்றடையும். இறுதி நாள் நிகழ்வில் ஏற்பாட்டுக்குழுத் தலைவரும், அமைச்சருமான புஞ்சிநிலமே, தேசத்தைக் கட்டியெழுப்புதல் அமைச்சின் அதிகாரிகள் உட்பட அப்பகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பங்கு கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
அனிதா
160 சிங்களக் குடும்பங்கள் மட்டும்தானா பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மாவிலாறு, சம்பூர், வாகரை பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் அகதிகள் தொடங்கி வன்னி்யிலிருந்து மூன்று இலட்சம் அகதிகள்.
அகதிகள், அகதிகள், அகதிகள். அரசுக்கு 160 குடும்பங்கள் மட்டும் தெரிகிறார்களோ? அவர்களும் வாழட்டும். வேண்டாமென்று சொல்லவில்லை.
இலட்சக்கணக்கில் பஞ்சப்பிராரிகளாகி அநாதைகளாகக் கிடக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் அகதிகளையும் கண்ணைத் திறந்து பாருங்கள். உதயத்தில கண் கூசினா, கூலிங்கிளாஸ் போட்டு பாருங்கள்.
palli
அனிதா உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான் ஆனால் தாங்கள் சுனாமி நிதியாக றசியிடம் கொடுத்த பலகோடி பணமும்; வணங்காமணுக்காய் கொடுத்த இன்னும் சில கோடியும் தாங்கள் சொன்ன மக்களை போய்சேர்ந்துதா? அதை கேட்டீர்களா? இந்த இரு பணமும் அந்த மக்களுக்கு போய்
சேர்ந்திருந்தால் அவர்கள் அகதிகளென நீக்கள் அல்ல யாரும் சொல்ல முடியாது, இதைதான் சொல்லுறது படுக்கையறையில் தூங்கும் திருடனை விட்டுவிட்டு தெருவால் போகும் திருடனை தெருதெருவாய் திரத்துவது என; எதுக்கும் அனிதா பக்கத்து பக்கத்தில் ஜெயபாலன் ஒரு கட்டுரை
எழுதியுள்ளார்; அதையும் நேரம் கிடைக்கும் போது படியுங்கோவன்;