சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த யாழ். கோட்டை படையினரால் புனரமைப்பு

999jaffna_fort.pngபுலிகளால் சேதப்படுத்தப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த யாழ். கோட்டையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும் வகையில் புனரமைக்கப்படவுள்ளது. வடமாகாண ஆளுநரின் உத்தரவுக்கிணங்க யாழ். படைத் தளபதியின் வழிகாட்டலில் இராணுவத்தின் 51 ஆவது படைப்பிரிவினர் இந்த புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுவருவதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

1618 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கீஸர் இந்தக் கோட்டையை அமைத்தனர். அதன்பின்னர் 1658 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் இக்கோட்டையை மேலும் விஸ்தரித்து புனரமைத்தனர்.

பின்னர் புலிகள் தமது பயங்கரவாத நடவடிக்கைக்கு இக்கோட்டையைப் பயன்படுத்தினர். இங்கிருந்துதான் புலிகள் படையினருக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்த யுத்த நடவடிக்கை காரணமாக யாழ் கோட்டை பெருஞ்சேதத்துக்குள்ளனது. புராதன நினைவுச்சின்னங்களையும் புலிகள் அழித்தனர்.

1996 ஆம் ஆண்டு படையினர் மேற்கொண்ட ரிவிரஸ  நடவடிக்கையால் யாழ் கோட்டையை படையினர் முற்றாகக் கைப்பற்றினர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இக்கோட்டையைப் பாதுகாத்து உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமாக மாற்றியமைக்கும் நோக்கில் இங்கு இப்போது புனரபை;புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • chandran.raja
    chandran.raja

    பாஞ்சாலிக்கு ஏற்பட்ட நிலயே யாழ்பாண கோட்டைக்கும். பாஞ்சாலிக்கு ஒரு ஒழுங்குமுறை இருந்தது. இந்தக் கோட்டைக்கு அப்படியில்லை. போர்த்துக்கீசர் ஒல்லாந்தார் ஆங்கிலேயர் சிங்களவர் தமிழர் என்று சொல்லுகிற மிலேச்சர் இப்படி காலத்துக்கு காலம் கைமாறி வந்திருக்கிறது.
    நினைவுச் சின்னமாக புணர்அமைப்பதாக இருந்தால் வரவேற்கவேண்டியது. தூக்குபோடவும் சித்திரவதை கூடமாகவும் மனித எலும்புக்கூடுகளை புதைக்கிற இடமாகவும் வசதியானவர்களின் கேளிக்கை விடுதியும் ஆகாது என்பதற்கு யார் உத்தரவாதம் கொடுப்பது?.

    Reply