போதைப் பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு முயற்சித்த பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றுமொருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
மூன்று கிலோ ஆறு கிராம் போதைப்பொருட்களுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபுதாபியில் இருந்து வருகை தந்த ஒருவரே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான நிமால் மெதிவக்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது