வன்னி மக்களின் அவலத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது அல்ஜசீரா. – இலங்கைக்கு மற்றுமொரு தலையிடி

aljasira.jpgவன்னி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளின் அவல நிலை குறித்து “அல்ஜசீரா” தொலைக் காட்சிச் சேவை சுயாதீன விசாரணை அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது. இம்முகாம்களிலுள்ள அகதிகள் மற்றும் இம்முகாம்களில் மனிதாபிமான சேவைகளில் ஈடுபட்டிருக்கும் மனிதாபிமானப் பணியாளர்கள் ஆகியோரை “அல்ஜீரா” பேட்டி கண்டுள்ளது.

தமிழ்ப் பிரஜைகளுக்கு எதிராகப் படுகொலைகள், யுத்தக் குற்றங்கள், கற்பழிப்புகள், கடத்தல்கள், சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற கொடூர நடத்தைகள், கைதுகள் மற்றும் தடுத்து வைப்புகள் உட்பட வன்முறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்றும் சர்வதேச சமூகம் கடுமையாக குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்த நிலையில் “அல்ஜசீரா தொலைக்காட்சி” சேவை வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகள் மீது இலங்கை அரசினால் “அரச பயங்கரவாதம்” கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்று தனது சொந்த ஆய்வு மூலம் வந்து செய்தி வெளியிட்டுள்ளது.

உலகின் பிரபல தொலைக் காட்சி சேவைகளில் ஒன்றான “அல்ஜசீரா தொலைக் காட்சி” சேவை இலங்கை அரசுக்கு மற்றுமொரு தலையிடியாக மாறலாம் என்றும் சர்வதேச அரசியல் அவதானிகள் நம்புகின்றனர்.  ஏற்கனவே “சனல்04” தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சிகளால் இலங்கை அரசு பலத்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றமை தெரிந்ததே.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இலங்கை அரசு விரைவாக அந்த மக்களை மீள்குடியேற்றம் செய்து விட்டால், இப்படியான பிரைச்சினைகள் வர வாய்ப்பில்லையே?? எனவே தொலைக்காட்சிகளில் பழி போடுவதை விட, தனது செயற்பாடுகளினால் இச்செய்திகளின் முக்கியத்துவங்களை குறைக்கலாமே?? சிந்திக்குமா அரசு??

    Reply
  • மாயா
    மாயா

    இனி இப்படியான தலைவலிகள் தொடரும் என நம்பலாம். அதற்கு காரணம் இலங்கை ஊடக அடக்குமுறை மற்றும் அரசின் தற்போதைய மமதையே என தெரிகிறது. இதுதான் முகாம்களில் வாழும் மக்களுக்கு விடிவை கொடுக்கப் போகிறது. தமது வெற்றியை தக்க வைத்துக் கொள்ள, இனியாவது நியாயமாக அரசு நடந்து கொள்வதற்கு முயல வேண்டும். இல்லையென்றால் பதில் சொல்லவே தலையை முட்டி மோதிக் கொள்ள வேண்டி வரும்.

    Reply
  • nilak
    nilak

    அப்ப எல்லாம் நல்லாப் போகுது என புலம்பெயர் குழுகொடுத்த சான்றிதழ் என்னாச்சு?

    Reply