செனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காட்சிகள் போலியானவை என்பதனை நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் இலங்கை சமாதான ஏற்பாட்டாளருமான எரிக் சொல்ஹெய்ம் ஒப்புக் கொண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக உடனே விசனம் தெரிவித்த நோர்வே அமைச்சரும், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியவருமான எரிக் சொல் ஹெய்ம், தற்போது அது பொய்யான வீடியோ எனக் கூறியுள்ளார்.
இந்த படுகொலைக் காட்சிகள் குறித்து பான் கீ மூனுடன் தான் பேச இருப்பதாகவும் தெரிவித்தார்
பார்த்திபன்
நல்ல விடயம். எரிக் சொல் ஹெய்ம் இந்த ஒளிப்பதிவை எவ்வாறு போலியானதென உறுதிப்படுத்தினார் என்ற விபரத்தையும் கோத்தபாய ராஜபக்ஷ சொல்லியிருந்தால், எல்லாரும் உண்மை எதுவென புரிந்து கொள்ள உதவியிருக்கும்.
பார்த்திபன்
இப்போ புலிப்பபினாமிகள் எரிக் சொல் ஹெய்மை வாயில் வந்தபடி திட்டத் தொடங்கி விட்டனர்.
எரிக் சொல்ஹெய்ம் இரட்டைவேடம் அம்பலம் திடுக்கிடும் தகவல்
http://vannionline.blogspot.com/2009/09/blog-post_9956.html
மாயா
Sri Lanka Govt. exposes technical analysis of Channel-4 Video
Created from a video camera, not from a mobile phone: Sound dubbed
(Lanka-e-News 05.Sep.2009 12.30PM) In video coding or broadcasting to create a final video for any occasion it is the practice to start with high quality video first while transcending with editing for a final product. Mpeg4 is a compressed format.
If one considers the Channel- 4 video:
* It says it came from a mobile phone video source. There are only two formats in mobile video formats. One is an old 3GPP format and the other an advanced Mpeg4, H-264 part 10 which is MP4 format which is highly processor intensive encoding and due to this issue, mobile phones in the present markets does not produce high quality videos. Such processors are not that powerful to take good quality video that Channel- 4 claims since channel – 4 video is much high quality than existing Smart phones can create TODAY.
* Within H-264 coding we also have extra component called Motion Vectors (VMC) which are used to predict motion on temporal and spatial domain. The Channel – 4 video have quite high quality VMC(motion Vector) and this VMC came from a video camera and not from a mobile phone source. Also Mobile source also tend to be blocky in nature when it come to motion.
* Since original video is from AVI and QuickTime format, the whole video scenario indicates that ORIGINAL video is of high quality that came from a video camera source since mobile formats does not use AVI or Quicktime which are high quality video formats.
* If they changed the mobile format to AVI or QT then the final video will be of poor quality. In the analysis it was found that the AVI and QT formats are of very high quality.
* Also it is quite explicit that the camcorder video was transferred to a computer for editing and sound was dubbed later and gun shots were not in synchronism with the video and normally audio is always way ahead of the video since video processing takes time and in this case the audio is very late INDICATING a very amateurish video and audio editing.
See Original Video in this URL: http://www.nowpublic.com/world/channel-4-released-video-evidence-sri-lankas-war-crimes-0
About the Analyst:——
Siri Hewawitharana, former head of Cisco’s global broadcast and digital video practice, has held a number of significant business development and technical leadership roles with some of the world’s most successful telecommunication and broadcasting organisations. These include head of systems engineering for Star TV Hong Kong, head of visual communication for OTC and director of engineering for WIN TV. As chief architect of Optus’ Network Systems Design Broadcast and Satellite TV operation, Mr. Hewawitharana was responsible for creating and operating Optus’ $47 million Pay TV Video Operations Centre.
Courtesy: Defence Ministry
more details: http://www.lankaenews.com/English/news.php?id=8268
Anonymous
சனல் 4 காட்டிய பட மூலமும், தொகுப்பும் தவறு என்கிறீர்கள். ஆனால் படம் பொய்யானது என ஏன் சொல்லவில்லை. நாறல் மீனைப் பற்றிப் பேசாது தாளிப்பில பிழை சொல்லுறது எந்த அறிவு? அரசு போர்க் கால படங்களை தற்போது கைவசப்படுத்தும் அவசரம் ஏன்?
பிற ஊடகங்களை முடக்குவதும்,தடுப்பதும் ஏன்? சாட்சியற்ற யுத்ததை யார் நடத்தியது? பயங்கரவாத பழைய நடவடிக்கைகளை பேசாது புதிய கட்டுமானப் பணிகளில் கவனம் செலுத்துவோம் என லிபியாவில் வைத்து மகிந்த பேசியதின் மர்மமென்ன?
சாந்தன்
முதலாவது – இங்கே சிக்கலுக்குள்ளாக்கப்படுவது வீடியோ உண்மையா இல்லையா என்பதல்ல. மாறாக ஒரிஜினல் வீடியோ செல்லிடத்தொலை பேசியில் படம் பிடிக்கப்பட்டதா என்பதே. வீடியோவின் தரத்தை வைத்டுப்பார்க்கும் போது இது தரமான வீடியோ கமராவில் இருந்து வந்தது என்பது எல்லோருக்கும் விளங்கும். இதை வெளியில் ‘கடத்த’ செல்லிடத்தொலைபேசியின் வீட்யோ கொடெக்கில் என்கோட் பண்ணியிருக்கிறார்கள். (செல்ல்லிடத்தொலைபேசி வழியாக அனுப்ப வசதியாக இருக்கலாம்). உயர் ரக வீடியோ கமராவில் படம்பிடிக்கப்பட்டது என்பது உண்மையாக் இருக்கலாம் ஏனெனில் இருநாட்களுக்கு முன்னர் அமைச்சர் அரச தொலைகாட்சி நிலைய வீட்யோக்களை கையகப்படுத்தியது. அதாவது இக்கொலைகளை அரச ‘பத்திரிகையாளர்களே’ படம்பிடித்தனர் என்கின்ற உண்மை! இதிலிருந்து தெரிவது ஸ்ரீலங்காவின் அரச பத்திரிகையாளர்கள் எவ்வளவு தூரம் கொலைகளுக்கு சாட்சிகளாக இருந்திருக்கிறார்கள் என இவ்வாறான வீடியோக்கள் பல அரச தொலைக்காட்சி நிலயத்தில் இருக்கின்றன என்பது உண்மைபோலட் தெரிகிறது. மேலும் வீடியோ ஃபோமற் மாறும்போது ஒளி/ஒலி ட்ரக்குகள் முன்பின்னாக இழுபடும் என்பது பலருக்கும் தெரியும். இதைவைத்து வீடியோவே பொய் எனச் சொல்லமுடியாது. வீடியோவும் ஓடியோவும் சிங்க்கிரொனைஸ் ஆகாததற்கு ஃபோமற் மாற்றமே காரணம் என்பது தெரிந்ததனால் தான் ஆய்வாளர் இதை எடிற் பண்ணியவர் ‘கத்துக்குட்டி’ என்கிறார். அவ்வளவுதான்!
இராக்கிய சிறைச்சாலை ‘அபுகிரேப்’ இல் படம்பிடிக்கப்பட்ட ‘காட்சிகள்’ பல ராணுவத்தினர் வசம் இருக்கிறது என்கின்ற ஐயத்தில் அமெரிக்க அரசு அவ்வீடியோக்களை கையகப்படுத்த முயன்று தோற்றது. ஆனால் அமெரிக்க அரசு ஒருபோதும் தொலைக்காட்சி நிலையங்களையோ அன்றி பத்திரிகையாலர்களையோ நிர்ப்பந்திக்க முடியவில்லை. நேற்று ஏ.பி செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த அமெரிக்க ராணிவத்தினர் கொல்லப்படும் படங்களை அமெரிக்க ராணுவ அமைச்சகம், மற்றும் இறந்த ராணுவ வீரனின் குடும்பம் பணிவாகக்கேட்டும் அவற்றை நிராகரித்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
“…Siri Hewawitharana, former head of Cisco’s global broadcast and digital video practice…”
இது அவரே சொல்லாத விடயம். அவர் தன்னைப்பற்றிச் சொல்வது “I was a head of R&D in a Major British Broadcasting company …and later worked in global companies like Cisco and Cable and Wireless and Ericsson…” இங்கிலாந்தின் ஒரு பெரிய நிறுவனத்தின் ஆய்வு மற்றும் விருத்தி பகுதியில் ஒரு பொறுப்பாளன் (பலரில் ஒருவன்). சிஸ்கோவுக்கு வேலை செய்திருக்கிறேன் என்கிறாரே அன்றி சிஸ்கோவில் முன்னைநாள் முகாமையாளராக இருந்தேன் என்றல்ல.
மாத்தையா
// சனல் 4 காட்டிய பட மூலமும், தொகுப்பும் தவறு என்கிறீர்கள். ஆனால் படம் பொய்யானது என ஏன் சொல்லவில்லை. //
கதையே தவறான போது படம் நாறிடும். உங்கள் நாறல் மீன் கதை போல?
// பயங்கரவாத பழைய நடவடிக்கைகளை பேசாது புதிய கட்டுமானப் பணிகளில் கவனம் செலுத்துவோம் என லிபியாவில் வைத்து மகிந்த பேசியதின் மர்மமென்ன?//
சாப்பிடுற நேரத்தில் , எடுத்த வாந்தி குறித்து பேசப் போனால் உள்ளதையும் சாப்பிட ஏலாமல் போகலாம்.
chandran.raja
இங்கே சிக்கலுக்குள்ளாக்கப்படுவது வீடியோ உண்மை இல்லையா என்பதல்ல. சிந்தப்படுகிற இரத்தமும் கொலைப்படுவதும் மனித உயிர்களே. இதைச்செய்தவர்கள் யார் என்பதே கேள்வி?
சிங்களகுரல் இணைப்பை வைத்து இது சிங்கள இராணுவம் தான் செய்தது என்பது தவறான முடிவுக்குதான் இட்டுச்செல்லும். போராட்டம் என்ற பெயரில் எமது இனத்தில் தோன்றிய புலியியக்கம் இராணுவத்தை விட பலமோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். இராணுவ சீர்ருடையணிவதும் பாதணியை அணிவதும் ஒன்றும் புலிகளுக்கொன்றும் புதியதல்லவே! புங்குடுதீவு தர்சினி வங்காலை மாட்டின் மூர்த்தி குடும்பமும் இப்படியான பட்டியல்தானே வருகிறது. சர்வதே அங்கீகாரத்தை புலிகள் எடுப்பதற்கு இதற்குமுதல் இறக்கிவிட்ட பொய்தான் பொலநறுவையிலும் குறுநாகல்லிலும் தமிழரின் உடல்உறுப்பை ஏற்றுமதி செய்யும் நிலையம் இருப்பது என்பது. ஆகவே சிக்கலுக்குள்ளாக்கப்படுவது இந்தநடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தமிழ் இராணுவக்குழுக்களா?சிங்களஇராணுவமா ? என்பதே. இதை நிரூபிக்கும் பட்சத்திலேயே உண்மையை வெளிக்கொண்டுவர முடியும் சாந்தன்.
சாந்தன்
“….செனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காட்சிகள் போலியானவை என்பதனை நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் இலங்கை சமாதான ஏற்பாட்டாளருமான எரிக் சொல்ஹெய்ம் ஒப்புக் கொண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்…..”.
இல்லை இல்லை… என்கின்ற நீங்கள் பழியை யார் தலையில் ‘வசதியாக’ப் போடலாம் என சிந்திக்கிறீர்கள். இந்த வசதியான தாளிப்புகள் உலகுக்கு ஒன்றும் புதிதல்ல. திருகோணமலை 5 மாணவர்கள், பட்டிணிக்கெதிரான எல்லைகள் கடந்த அமைப்பின் 17 ஊழியர் கொல்லப்பட்டபோதும், பொஸ்னியாவிலும் இது நடந்தது. டாஃபூரிலும் நடக்கிறது. இனிமேலாவது ஸ்ரீலங்கா கிரியேற்றிவ் ஆக பொய் சொல்ல பழகவேண்டும்.
john
மறைந்தவர்களுக்கு எனது அஞ்சலிகள்.
பார்த்திபன்
சாந்தன்,
இப்ப என்ன சொல்ல வாறியள். எரிக் சொல்ஹெய்ம் ஒளிப்பதிவு போலியானது எனச் சொல்லவில்லை என்கின்றீர்களா?? அல்லது எரிக் சொல்ஹெய்ம் சொன்னதை கோத்தாபாய ராஜபக்ஷ தமக்குச் சாதகமாக பயன்படுத்துகின்றார் என்கின்றீர்களா??
உண்மையில் அரசு தவறு செய்தது என்பதை ஆதாரமாக எடுத்து வைக்க வந்தவர்கள், ஏன் போலியான வேலைகளையும் செய்ய முனைந்தார்கள். இப்படியான வேலைகளால் உண்மைகள் எடுபடாமல் போய்விடுமென்பதை, அவர்களால் புரிய முடியவில்லையா?? அல்லது புரியும் தன்மையே இல்லையா??
சாந்தன்
“..இப்ப என்ன சொல்ல வாறியள். எரிக் சொல்ஹெய்ம் ஒளிப்பதிவு போலியானது எனச் சொல்லவில்லை என்கின்றீர்களா?? அல்லது எரிக் சொல்ஹெய்ம் சொன்னதை கோத்தாபாய ராஜபக்ஷ தமக்குச் சாதகமாக பயன்படுத்துகின்றார் என்கின்றீர்களா??…”
நோர்வே பத்திரிகைக்கு எரிக் சோல்ஹைம் கொடுத்த இன்ரவியூ வில் என்ன சொல்கிறார் என்பதைப் பாருங்கள்.
“….International Development Minister Erik Solheim said he had not been surprised if the footage is genuine:
There are dozens of people (sic) have been killed or have disappeared in Sri Lanka in recent years, without that there has been some form of judicial process or verdict. And there is overwhelming evidence of structures within the state apparatus are behind many of these killings, he told Aftenposten.no.
மேலும் பல விடயங்கலையும் அவர் பேசுகிறார். கீழுள்ள லிங்க் இல் பார்வையிடுங்கள்.
http://www.sundaytimes.lk/090906/Columns/political.html
இது இன்றைய ஸ்ரீலங்கா புதினப்பத்திரிகையில் வந்துள்ளது. இக்கட்டுரையில் கோத்தபாயாவின் ‘கதை’ எங்கும் காணோம். ஆனானப்பட்ட அரச பத்திரிகையான டெய்லி நியூசிலும் காணோம்.
’…உண்மையில் அரசு தவறு செய்தது என்பதை ஆதாரமாக எடுத்து வைக்க வந்தவர்கள், ஏன் போலியான வேலைகளையும் செய்ய முனைந்தார்கள்….’
அவர்கள் எந்த போலியான வேலைகளையும் செய்யவில்லை. நான் முன்னர் சொன்னது போல ஃபோமற்றை மாற்றினர். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஒன்று இவ்வீடியோவை வெளியே ‘கடத்துவதற்கு’ இலகுவான ஃபோமற்றுக்கு மாற்றியிருக்கலாம். அப்போது வீடியோ கோடெக் மாற்ரலில் நான் முன்னர் சொன்னது போல ஓடியோ/வீடியோ சிங்ரனைசிங் இல் தவறுகள் வரும். இல்லையாயின் ஒரிஜினல் வீடியோ எங்கிருநது யார்கைகளூடாக வந்தது என்பதை மறைக்கும் முயற்சியாகவும் இருக்கலாம். இதை பல மனித உரிமை வழக்குகளில் பார்த்திருப்பீர்கள். அதாவது என்னைப்பொறுத்தவரை இது அரச தொலக்காட்சி படப்பிடிப்பாளர்களின் கைகளூடாக வந்தது என நினைக்கிறேன். அத்தடயங்களை தற்போதைக்கு மறைக்க வேண்டிய தேவை உண்டு. அரசு இவ்வீடியோவை யார் லீக் பண்ணினார்கள் என அறியும் பட்சத்தில் அவரை உயிருடன் விட்டுவைக்கும் என உண்மையாகவே நீங்கள் நினைக்கிறீர்களா அரச தொலைக்காட்சி வீடியோ அனைத்தையும் கையகப்படுத்திய நிகழ்வினை இதற்கு ஆதாரமாகக் கொள்லலாம்.
palli
பல்லியின் கருத்தல்ல ஆனால் சரியான கருத்து இந்தஇடத்தில் என்பதால் நக்கீராவிடம் கடன் வாங்கி போடுகிறேன்; நன்றி நக்கீரா;
புலிக்குட்டிகள் சிங்கப்பால் குடித்து
அகதிகள் முகாமுக்குள்ளேயே
புலி வேட்டையாடுகிறார்கள்.
கிலிசகெட்ட இனம் என்று
மண்ணில்லாக் காரணத்தால்
சேறுவாரி எறிகிறாள் ஒரு கிழவி.
வானம் மட்டும் வஞ்சகமில்லாது
அழுதுகொண்டிருக்கிறது
தன் ஆசைதீர எம்மக்கள் மனம்போல்.
இனி வஞ்சகங்களுக்கு வரட்சி இல்லை.
Kusumbo
எறிக் சூல்கெயும் அந்த வீடியோ சரி என்பதற்கான சரியான ஆதாரம் என்ன? பின் பிழையானது பொய்யானது என்பதற்கான ஆதாரம் என்ன என்பதை எப்போது சொல்வார். குழந்தைப்பிள்ளைத்தனமான ஒரு மனிதர் எம்மக்களின் சமாதானத்துக்காகக் கதைத்தார் என்பதற்காக நாம் வெட்கப்படுகிறோம். பொறுப்புள்ள ஒரு மனிதர் கோமாளிகள் போல் கதைக்க ஏலாது. கவிதைக்கு நன்றி பல்லி