சம்பந்தன் தலைமையில் 7 பேர் ஜனாதிபதியுடன் திங்களன்று சந்திப்பு

TNA Leader R Sampanthanதமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் திங்கள்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெறவுள்ள சந்திப்பின் போது அக் கட்சியின் சார்பில் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் 7 பேர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்

நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழு கூடி இது தொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராஜா,  பி.ஆர்.எல்.எப். சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், டெலோ சார்பில் என்.ஸ்ரீகாந்தா ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான தங்கேஸ்வரி கதிர்காமர், சிவசக்தி ஆனந்தன் மற்றும் ஐ.எம்.இமாம் ஆகியோரே மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரகள் ஆவர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரசைச் சேர்ந்த கஜேந்திரன் பொன்னம்பலம தற்போது வெளிநாட்டில் தங்கியிருப்பதால் இக் குழுவில் இடம் பெறவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் இடம் பெறவிருக்கும் சந்திப்பில் பேச வேண்டிய விடயங்கள் குறித்து நேற்று கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்ததாகவும், இடம் பெயர்ந்த வன்னி மக்களின் மீள் குடியேற்றம், 1990 ல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம், அண்மைக் காலமாக வடக்கு கிழக்கில் இடம் பெற்று வருவதாகக் கூறும் அத்து மீறிய குடியேற்றங்கள் போன்ற விடயங்களுடன் அரசியல் தீர்வு தொடர்பாகவும் பேசுவதென்றும் அக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • palli
    palli

    சம்பந்தர் ஜயாவிடம் பல்லியின் பத்தம்ஸ கோரிக்கைகள்;

    பேசுங்க; அது தமிழ் மக்களுக்காக இருக்கட்டும்;
    பேசாதையுங்கோ;; புலிகளின் அருமை பெருமைகளை;
    வையுங்க; தமிழரது அவசரகால தீர்மானதை,
    வையாதையுங்கோ; இத்து போன ஈழ கோரிக்கையை;
    கேழுங்க; வன்னி மக்கள் தேவைகளை,
    கேளாதையுங்கோ; உங்க தனிபட்ட தேவைகளை;
    காட்டுங்கள்; தமிழர் படும் இன்னல்களை;
    காட்டாதையுங்கோ, நீங்க புலிகளுடன் எடுத்த படத்தை;
    கூட்டி செல்லுங்க; பிரச்சனையை பேசகூடியவர்களை:
    கூட்டி செல்லாதையுங்கோ; பிரச்சனையாய் தெரிந்தவர்களை,

    Reply
  • santhanam
    santhanam

    தமிழ் தேசியக் கூட்டமைப்பு திரைமறைவில் அடிக்கடி சந்திப்பார்கள் ஆனால் மக்களிற்கு சொல்லி திங்கள் சந்திக்கிறார்கள் இவர்கள் மகிந்தாவிற்கு சர்வதேச ரீதியில் ஏறபட்டுள்ள அபகீர்த்தியை காப்பாற்ற சம்பந்தரின் நண்பன் என்.எஷ்.கிருஷ்ணாவின் ஏற்பாட்டில் நடைபெறுகிறது. யாருக்கும் அந்த அப்பாவி தமிழ் பொதுமக்கள் பற்றி கவலையில்லை அவர்களது வாக்கில்தான் குறி. முள்ளிவாய்க்காளில் கருவாடக்கி வவுனியாவில் முள்வேளிக்குள் பந்தாடுகிறார்கள் அந்தமக்கள் இலங்கையின் அடுத்த அன்னிய சந்தை பொருளாக்கியுள்ளனர். இதில் பணத்திற்காக அலையும் ஆயுதம்தரித்த தமிழன் அரசியல்வாதிகள் பொதுதொண்டு நிறுவன பனியாளர்கள்..

    Reply
  • தனஞ்சேயன்
    தனஞ்சேயன்

    இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் வரலாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததை யாரும் மறுக்கமுடியாது. கூட்டமைப்பு அரசியல் களத்துக்கு வந்து எட்டு வருடங்களே ஆகின்றபோதிலும் கடந்த கால அரசியல் தலைமைகளின் தொடர்ச்சியாகவே இது ஆரம்பிக்கப்பட்டது.

    தமிழ்க்காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் செயற்பாடுகளிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களை அந்நியப்படுத்திப் பார்க்கமுடியாது. எனவே கூட்டமைப்பு இன்று வெளியிட்டிருக்கும் நிலைப்பாடுகளைக் கடந்த கால நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தியே பார்க்க வேண்டும். இனப் பிரச்சினையின் தீர்வுக்காக ஜனாதிபதியுடன் ஒத்துழைக்கப் போவதாகவும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் கூட்டமைப்பு கூறுகின்றது. தமிழ்த் தலைவர்கள் கடந்த காலங்களிலும் ஒத்துழைப்பு பற்றிப் பேசியிருக்கின்றார்கள். ஆட்சியாளர்களுடன் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றார்கள்.

    டட்லி சேனநாயக்கவின் தலைமையில் 1965ம் ஆண்டு அமைந்த அரசாங்கத்துடன் தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ¤ம் தொடர்ச்சியாக ஒத்துழைத்ததை ஒத்துழைப்புக்கு உதாரணமாகக் கூறலாம். பதவிக்கு வந்த எல்லா அரசாங்கங்களுடனும் தமிழ்த் தலைவர்கள் இனபிரச்சினை தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்கள். தமிழ்த் தலைவர்கள் வழங்கிய ஒத்துழைப்பினாலோ அரசாங்கங்களுடன் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளாலோ இனப் பிரச்சினையின் தீர்வுக்கு எதுவும் நடக்கவில்லை.

    இதற்கான முழுப் பொறுப்பையும் சிங்கள அரசியல் தலைவர்கள் மீதே தமிழ்த் தலைவர்கள் சுமத்தி வந்திருக்கின்றார்கள். தமிழ் மக்களையும் அவ்விதமாக நம்பவைத்திருக்கின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.
    அத்தோல்விகளுக்குக் கூடுதலான பொறுப்பைத் தமிழ்த் தலைவர்களே ஏற்க வேண்டும். தமிழ்த் தலைவர்கள் யதார்த்தத்துக்கு அமைவாகச் செயற்பட்டிருந்தால் இத்தோல்விகளைத் தவிர்க்க முடிந்திருக்கும். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் ஓரளவாவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும்.
    தமிழ்த் தலைவர்கள் யதார்த்தத்துக்கு அமைவாக ஏன் செயற்படவில்லை என்பது பற்றி மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. யதார்த்தத்தை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை என்பது ஒரு கருத்து. பிரச்சினை தொடர்வதை அரசியல் லாபத்துக்காக விரும்பியதாலேயே யதார்த்தத்துக்கு முரணாகச் செயற்பட்டார்கள் என்பது இன்னொரு கருத்து.

    கடந்த காலப் பின்னடைவுகளைப் படிப்பினையாகக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டும் . முழுமையான தீர்வை உடனடியாகப் பெறக்கூடிய சூழ்நிலை இப்போது இல்லை. சாத்தியமான தீர்வைப் பெற்றுக்கொண்டு முழுமையான தீர்வுக்காக முயற்சிக்க வேண்டும் என்பதே இன்றைய யதார்த்தம்.

    Reply
  • தனஞ்சேயன்
    தனஞ்சேயன்

    எழுபது வருடமாக சிங்கள எதிர்ப்பு பேசி அரசியல்செய்த தமிழ்தலைவர்கள் தமிழரை ஏமாற்றினார்கள். தமிழருக்கு தேவை அதிகாரம் அல்ல அபிவிருத்தி

    Reply
  • மாயா
    மாயா

    கூட்டமைப்பினர் தமது இருப்புக்காக பச்சோந்தியாகக மாறும் ஒரு கூட்டம். இவர்களை நான் எப்போதோ கை கழுவி விட்டேன்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தனஞ்சேயன்,
    உங்கள் கருத்து உண்மையானது தான். சமீபத்தில் ஆனந்தசங்கரி அவர்களும் ஜெயவர்த்தனாவின் காலத்தில் அவர் ஒரு தீர்வுத்திட்டத்தை கொண்டு வர முழுமையாக முயற்சித்ததாகவும், அதில் கூட்டணியினருடன் முக்கால்வாசி திட்டம் பேச்சுவார்த்தைகளின் போது நிறைவு பெற்றதாகவும், பின்பு கூட்டணியினர் புலித்தலைவருக்கு பயந்து திட்டத்தை குளப்பியடித்து விட்டு இந்தியாவிற்கு ஓடி விட்டதாகவும் தெரிவித்திருந்தார். கூட்டணியினர் குளப்பியடித்துவிட்டு இந்தியாவிற்கு ஓடப் போவதையறிந்த ஜெயவர்த்தனா, காமினி திசாநாயக்காவை அனுப்பி கூட்டணியினரை 2 தினங்களாவது நின்று இப்பேச்சுவார்த்தையை நிறைவு செய்து ஒரு தீர்வு ஏற்பட உதவுமாறு கெஞ்சியதாகவும், ஆனாலும் தாம் குளப்பியடித்து விட்டு இந்தியா சென்று விட்டதாகவும் சொல்லியிருந்தார்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தமிழருக்கு தேவை தம்மைதாமே நாம் யார்? யாரால் வழிநடத்தப்பட்டோம். யாரால் வழிநடத்தப் படுகிறோம் என்பதை முதலில் உணர்ந்து கொள்ளப்படுவதே! கடந்தகாலத் தலைவர்கள் இலங்கைத்தீவில் அக்கறை கொண்டவர்களா? நான் தமிழ்தலைவர்கள் என்று சொல்லும் போது தமிழரசுக்கட்சியையும் தமிழ்காங்கிரசைத்தான் சொல்லுகிறேன்.

    தம்இனத்தின் தலைவராக இருக்க விரும்பினார்களே அன்றி தமிழினத்திற்கு அறிவுபுகட்டி அழைத்துச்செல்ல விரும்பவில்லை. இனவாதமும் மதவாதமும் பாமர மக்களிடம் இலகுவாக வாக்குகளைப் பெற்று வெற்றியடையும். இறுதியில் இழியும் நிலையும் அடையும். இதன் பலாபலன்களை புலிகளிடமும் கண்டோம். அதை பின் தொடர்ந்து தமிழ்தேசியக் கூட்டமைப்பும் செல்லுகிறது. ஐக்கியதேசிய கட்சியும் சிறீலங்கா சுகந்திரகட்சியும் தமது கட்சியின் பெயரின் முன்னால் “சிங்களம்” என்றதையும் இணைத்திருந்தால் அது ஒரு தேசியக்கட்சியாகி இருக்கமுடியுமா? இதில்லிருந்து தெரியவில்லையா? இலங்கையில் இனவாதத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் யார்? என்று.

    அகிம்சையில் போராடினோம் பலன் கிடைக்கவில்லை ஆயுதமெடுத்து போராடினோம் என்று புராணம் பாடுவதற்கும் மிகுதி தமிழமக்களையும் படுகுளியில் வீழ்த்துவதற்கே இனியும் இட்டுச்செல்லும். இனவாதத்திற்கு முடிவுகட்ட வேண்டுமென்றால் தமிழ்மக்கள் தேசியகட்சியை தேடிச்
    செல்லவேண்டும் இல்லையேல் உருகாக்கவேண்டும். இதுவே தமிழ்மக்கள் கற்றுக் கொள்ளவேண்டிய பாடமும் செல்லவேண்டிய இடமும்.
    மூடப்பழக்கங்ளையும் பிற்போக்குதனத்தையும் கைவிடும்பட்சத்திலேயே எம்மினம் என்றும் எம்மினமாக இருக்கும்.

    Reply