மஹபொல கண்காட்சியை மீண்டும் நாடு முழுவதும் நடத்துவதற்கு அரசாங்கத்தின் அநுசரணையைப் பெற்றுகொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரனையை வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்திருந்தார்.
இவ்வருடம் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகும் இக்கண்காட்சியை நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை நடத்துவதற்காக செயற்குழுக்களும் அமைக்கப்படவுள்ளன.