ஈழத்து கலைத்துறையில் மூன்று தசாப்தங்களாக அறியப்பெற்ற கார்மேகம் நந்தாவின் மெல்லிசைப் பாடல்களின் தொகுதியான தீராத மயக்கத்திலே என்ற நூலின் வெளியீடும் அவரது தேர்ந்த மெல்லிசைப் பாடல்களின் தொகுப்பான குறுந்தட்டு வெளியீடும் நோர்வேயில், ஒஸ்லோ நகரில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை செப்டெம்பர் 5ம் திகதி இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் லண்டனிலிருந்து நூலகவியலாளர் என்.செல்வராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்.
1973இல் இலங்கை வானொலியில் இணைந்த கார்மேகம் நந்தா, 1987இல் புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழ்ந்து வருகின்றார். இவர் 1977 முதல் 2008 வரை எழுதிய பாடல்களில் தேர்ந்த 170 பாடல்களை தீராத மயக்கத்திலே என்ற நூல் கொண்டுள்ளது.