இலங் கையில் தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலைக்குள்ளாகும் காணொளி வெளியானதையடுத்து தமிழக முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகள் மீண்டும் இலங்கை செல்ல தயக்கம் காட்டுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
1983 ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் முதல் அண்மைக்காலம் வரை அடுத்து தமிழகத்திற்கு அகதிகளாக சென்றவர்கள் 112 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
இந்தநிலையில், இலங்கையில் போர் நிறைவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்தே அவர்களில் பலர் இலங்கைக்கு மீண்டும் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனர். எனினும், இலங்கைப் படையினர் தமிழர்களை கடத்திச் சென்று கொலை செய்வதாக சனல் 4 வீடியோ காட்சி வெளியானதையடுத்து, இந்த அகதிகள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டுள்ளார்கள். தாம் தொடர்ந்தும் தமிழகத்தில் வாழ்வதையே விரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, அகதி முகாம்களின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.