சுனாமி ஏற்படும் பொழுது அதனை கண்டறியும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட கோபுர தொகுதியை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி ஏற்படும்போது வெளிப்படும் ஒலி அலைகள் மற்றும் ஒலிபெருக்கியின் ஊடாக மேற்கொள்ளப்படும் அறிவித்தல்களுக்கு மக்கள் இன்று அச்சங்கொள்ளத் தேவையில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர நடவடிக்கை பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் நிமால் வேரகம தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கோபுரங்கள் இன்று காலை 10 முதல் மாலை 5 வரை முதல் கட்டம் கட்டமாகப் பரிசோதிக்கப்படவுள்ளன. இந்த பரிசோதனை நடவடிக்கைகள் பின்னர் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த கோபுர தொகுதி செயல்பட ஆரம்பித்ததும் எதிர்வரும் காலங்களில் ஏற்படும் சுனாமி சுறாவளி மற்றும் அசாதாரண இயற்கை அனர்த்தங்கள் குறித்து முன்னரே அறிந்து அது குறித்த எச்சரிக்கையை மக்களுக்கு உடனடியாக அறிவிக்க முடியும் எனவும் நிமால் வேரகம மேலும் தெரிவித்துள்ளார்.