ஜனாதி பதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறக் கூடிய வல்லமை தம்மிடம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு அழைக்கப்பட்டால் தயங்காது அந்த அழைப்பைத் தாம் ஏற்றுக் கொள்ளப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியை ஒரு புதிய பாதைக்கு இட்டுச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் பெயரில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் தாம் ஆதரவு வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பல்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், கட்சித் தலைமைத்துவத்தின் ஆளுமையின்மையே தேர்தல் தோல்விகளுக்குக் காரணம் எனக் கட்சி உறுப்பினர்கள் கருதவில்லை எனவும், அவர் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர் ஒருவர் தமக்கு இருப்பதாகவும், பிரச்சினைகளைக் கட்சிக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளவே தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.