வன்னி முகாம்களின் அவலங்கள்: வன்னியில் இருந்து ஒரு மின் அஞ்சல்

IDP_Camp_Aug09நண்பர்களே

இலங்கையில் யுத்தம் உக்கிரமடைந்த காலங்களின்போது உலகமே சனங்கள் சனங்கள் என்று ஓலமிட்டுக் கொண்டிருந்தது. இப்போது யுத்தம் முடிவடைந்து விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பிறகான காலத்திலும்‌ அந்தச் சனங்களின் வாழ்நிலையில் மாற்றமேதும் வந்துவிடவில்லை – சாவின் கரங்கள் மூர்க்கமான எறிக்ணைகளாகத் தம்மைத் தாக்கிச் சிதைக்கும் என்ற பயத்தில் மருளத் தேவையில்லை என்பதைத் தவிர்த்துப் பார்த்தால். ஆனால் போரின் கடைசிக் கணம்வரை பெருங்குரலெடுத்துக் கதறிக் கொண்டிருந்த உலகு சட்டென்று மௌனமாகிக் கிடப்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப்பற்றிப் பேசுபவர்கள் அதற்குக் கபடத்தனமான அரசியற் சாயம் பூசியே அதைச் செய்கிறார்கள்.

IDP_Camp_Aug09260 000க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் செட்டிக்குளம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை நிலைமையைப் படுமோசமாக்கியிருப்பதாகக் கண்டு வந்தவர்கள் சொல்கிறார்கள்.. (இணைக்கப் பட்டிருக்கும் படங்கள் சாட்சி). தற்காலிகமாக அமைக்கப்பட்ட‌ மலக்குழிகளில் பல நிரம்பி வழிந்தபடியிருப்ப‌தாகவும் பல முற்றாகச் சீர்கெட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள். எங்கும் தாங்க முடியாத‌ துர்நாற்றம். இது பெருத்த சுகதாரச் சீர்கேட்டுக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கும் என்பது திண்ணம். இணைக்கப்பட்டிருக்கும் படங்களில் மனிதக் கழிவின் மீது நெளியும் புழுக்களைக் காணலாம்.. (அரசாங்கம் நெடுநாளைக்கு மக்களை இந்த முகாம்களில் வைத்திருக்கக் கூடாது என்பதற்காகவே ஐ.நா தற்காலிக மலசலக் குழிகளை அமைத்துக் கொடுத்திருந்தது. ஆனால் அரசாங்கத்துக்கு அவர்களை இப்போதைக்கு மீளக் குடியேற்றும் எண்ணம் சற்றேனும் இருப்பதாகத் தோன்றவில்லை. குறைந்த பட்சம் வெளியே உறவினர்களோடு சென்று தங்கி வாழக்கூடிய நிலையிலுள்ள குடும்பங்களையாவது சோதனைகளை முடித்து விட்டுச் செல்ல அனுமதிப்பதாயில்லை. அப்படிச் செய்வது முகாம்களில் நிலவும் மிகுந்த சனநெரிசலை வெகுவாகக் குறைக்கும்)

IDP_Camp_Aug09இங்கே இலங்கையில் ஜனநாயகம் நாளுக்கு நாள் சீர் கெட்டுக் கொண்டிருக்கிறது. அனைவரும் ஒரேகுரலில் ஒரேதொனியில் ஒரேபொருளையே உரைக்க வேண்டுமென்று நிர்ப்பந்திருக்கிறது. ஒரு சில பேரால் மட்டுமே இயக்கப்படும் அரச யந்திரம். பெருத்த மௌனம் சனங்கள் மீது ஒரு கரும்போர்வையாகப் படர்ந்திருக்கிறது. ஆனால் வெளியுலகிலும் அப்படியா? இலங்கை அரசுக்கெதிரான குரல் விடுதலைப் புலிகள் அழியும் மட்டும் தான் ஒலித்தென்றால், அவ்வளவும் புலிகளுக்கு ஆதரவாக ஒலித்த குரல் மட்டும் தானா? சனங்களைப் பற்றிய கரிசனை..? இனியான எதிர்காலம் என்ன?

நண்பர்களே, இப்பிரச்சனை குறித்து நான் பணிபுரியும் பத்திரிகைக்காக எழுதிய செய்தியில் எனது பெயரைப் போடுவதற்கே திராணியற்ற நிலையில், அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலை செய்யும் நபரொருவர் அனுப்பி வைத்த இப்படங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். இவற்றை உங்களின் வலைத்தளங்களில் பிரசுரிப்பதன் மூலமும், வெகுஜன ஊடகங்களில் பணிபுரிபவர்கள் தத்தமது ஊடகங்களில் வெளியிடுவதன் மூலமும் பரந்தவொரு சனத்திரளின் பார்வைக்கு இந்தப் பிரச்சனையைக் கொண்டு செல்லலாம் என்ற நம்பிக்கையில்…

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • chandran.raja
    chandran.raja

    அரசாங்கத்திற்கும் வவுனியா அரசாங்க அதிபருக்கும் அழுத்தம் கொடுப்பதையும் மின்னஞ்சல் அனுப்புவதுமே உடனடி செய்யக்கூடிய பயன் பெறக்கூடிய காரியம். சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா அமைச்சர் முரளீதரன் அவர்களே இவற்றை பொறுப்பெடுக்க வேண்டியவர்களும் சரியான தகவல்களை வழங்க வேண்டியவர்களும்மாகும். வேறுஎந்த நடவடிக்கைகளும் உடனடிபலனை அளிக்கப் போவதில்லை. “தேசம்நெற்” உரியநேரத்தில் தனது கடமையை செய்யுமென்று எதிர்பார்கிறேன்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மரத்தால் விழுந்தவனை மாடேறி விளக்கியது என்றொரு பழமொழியுண்டு. அதுபோல்த் தான் இந்த மக்களின் வாழ்வாகாமல் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க போதியளவு அழுத்தங்களை சகல ஊடகங்களும் கொடுக்க வேண்டும். புலிகளின் அக்கிரமத்தால் பாதிக்கப்பட்டு அரசை நம்பி வந்து சரணடைந்த இம்மக்களை, மீள் குடியமர்த்தி நிம்மதியான வாழ்வு கொடுக்க வேண்டிய கடமை அரசினுடையது. போர் முடிந்து 3 மாதங்கள் தாண்டியும் அந்த மக்கள் இன்னும் சிறை வாழ்க்கை வாழ வேண்டிய அவசியம் ஏதுமில்லை. எனியும் புலிகளைச் சாட்டிக் கொண்டு அரசு தனது கடமைகளை செய்யத் தயங்குவது, அரசின் மீது இந்த மக்களுக்கு அவநம்பிக்கையைத் தான் ஏற்படுத்தும்.

    Reply
  • மாயா
    மாயா

    மக்களை மீட்கிறோம் என போரிட்ட அரசு. மீட்ட மக்களை காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கே இருப்போர் அனைவரும் புலிகளல்ல. ஏதோ விதி வசத்தால் இவர்கள் இருக்கும் பகுதிக்கு புலிகள் வந்ததால் அவர்களும் புலிகளாயினர். இல்லாவிடில் புலிகளோடு வாழ வேண்டிய சூழல் உருவானது. இவற்றுக்கு கடந்த கால அரசுகளும் பொறுப்பு.

    தேர்தல் காலத்தில் பேசியவர்கள் இப்போது மெளனமாக இருக்கிறார்கள். வாக்குகளுக்காக வவுனியாவை வட்டமிட்டவர்கள் , இன்று ஏனைய தமிழ் கட்சிகள் போல் கொழுப்புக்கு திரும்பி தமது செயல்பாடுகளை பார்க்கத் தொடங்கி விட்டார்கள். சங்கரியின் சங்காரத்தைக் காணவில்லை. டக்ளசின் வீதி வலத்தை காணவில்லை. சித்தரின் சிந்தனையை காணவில்லை. கருணாவின் கை கொடுப்பை பார்க்க முடியவில்லை. மீண்டும் அடுத்த தேர்தலுக்குத்தான் தேரோட்டமா?

    ஒன்று நீங்களா செய்ய வேணும். இல்லாவிட்டால் செய்யிறவனுக்காவது செய்ய விட வேணும். புலிக் கொடியோடும் , பிரபாவின் படத்தோடும் வீதிக்கு இறங்கியோர் எங்கே போயினர்? உங்கள் போராட்டம் மக்களைக் காப்பாற்றவல்ல. புலிகளைக் காப்பாற்றவே நடந்தது. இதையும் மக்கள் உணர வேண்டும்.

    ஆகக் குறைந்தது வெளிநாடுகளில் இருக்கும் மக்கள் மின் அஞ்சல் வழியாவது , அந்த மக்களை மீள் குடியமர்த்த புகார்களை உலக ஊடகங்களுக்கு அனுப்பலாம். BBC யின் சிங்கள் சேவை முகாமில் உள்ள மக்களது நிலவரங்களை கொண்டு வந்தள்ளது. இது போல அனைத்து ஊடகங்களும் ஏதாவது செய்ய வேண்டும்.

    _______________________________________________
    Dolphin van scare in Vavuniya camps

    IDPs are struggling to cope due to recent floods
    Displaced Tamil people are being daily abducted from camps in Vavuniya by people who come in vans, a displaced person told the BBC.
    Speaking with BBC Sandeshaya from a camp for internally displaced people (IDP) in Vavuniya, the IDP said all the displaced try to hide in their tents as the ‘Dolphin vans’ arrive in the camps.

    “We do not know what exactly happens as everybody hides as soon as they see the vans. But I know that two to three people are disappearing daily,” he said.

    Some IDPs may also be secretly leaving the camps by paying the authorities, he said.

    “Some people have suddenly disappeared. I don’t know whether they were abducted or left with the help of the authorities.”

    Meeting relatives

    Those who have been already identified as LTTE operatives are sometimes helping the security officials to recognize those who have earlier supported the LTTE, according to the man.

    The Tamil man who did not want to be identified due to fear for his safety said they are only allowed to meet relatives separated by a barbed wire fence.

    மேலதிக செய்திகளை பார்க்க:

    http://www.bbc.co.uk/sinhala/news/story/2009/08/090824_idp_vans.shtml

    Reply
  • jalpani
    jalpani

    ஏதாவது என்பதே பலவீனத்தை பூசி மெழுகுதலையே காட்டுகிறது. செய்ய வேண்டியது ஏதாவது அல்ல. ஆயுதப் போரே. சிங்க இனவாத அரசுகள் நாடு பிளவுபடுவதை காலப் போக்கில் தமது கண்ணெதிரே காண்பார்கள்.

    சிங்களவர்கள் சிங்களவர்களாக இருக்க வேண்டும். முஸ்லிம் மக்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். ஆனால் தமிழர்கள் தமிழராக இருக்கக் கூடாது. இந்த நியாயம் எடுபடுமா?

    Reply
  • Rajmohan
    Rajmohan

    jalpani
    தமிழர்கள் தமிழர்களாக இருந்திருக்கலாம். ஆனால் தமிழர்கள் புலிகளாக இருக்க விரும்பியதாலேயே உலகம் முழுவதும் தமிழர்கள் மதிப்பை இழந்தார்கள்.

    Reply