பயங்கரவாதத்தை முறியடிக்க இலங்கையில் பயிற்சிக் கல்லூரி

பயங்கர வாதத்தை முறியடிப்பது எப்படி என்று சர்வதேச நாடுகளின் படையினருக்கு பயிற்சி வழங்குவதற்காக இலங்கையில் விசேட பயிற்சிக் கல்லூரி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினண்ட்  ஜெனரல் ஜகத் ஜயசுரிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைப் படையினர் பயங்கரவாதத்தை உள்நாட்டில் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இந்நிலையில், இலங்கைப் படையினரால் யுத்த நடவடிக்கைகளின் போது பயன்படுத்தப்பட்ட இராணுவ தந்திரோபாயங்களையும் இராணுவ உத்திகளையும்  அறிந்துகொள்வதில் சர்வதேச நாடுகள் மிகுந்த ஆர்வம்காட்டி வருகின்றன.

பாகிஸ்தான் இராணுவத்தினர் ஏற்கனவே  இலங்கை இராணுவத்தினரிடம் பயங்கர வாத ஒழிப்பு நடவடிக்கைகள் சம்பந்தப் பட்ட பயிற்சிகளை பெற்றுள்ளனர்  என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • பல்லி
    பல்லி

    என்னது; சர்வதேசத்தை வைத்து காமடி கீமடி பண்ணலையே;

    Reply
  • abeywickrema
    abeywickrema

    India, our big brother, wont be happy about this indeed after giving all support to improve the IDP camps. Is this the real reason Pakistan asked for, nonetheless congratulate our heros who are becoming masters.

    Reply
  • சங்கர்சன்
    சங்கர்சன்

    கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆட்கடத்தல், கப்பம், குறிப்பிட்ட இனத்தின் மீது விமானக்குண்டு வீச்சு……இதெல்லாம் படிப்பிக்க பயிற்சிக்கல்லூரி கட்டும் அளவுக்கு ஸ்ரீலங்கா இதில எக்ஸ்பேட் எண்ரதை ஏற்றுக்கொள்ளத்தான் வேணும்!

    Reply