பிரபாகரன் உருவத்தில் விநாயகர் சிலை : திருப்பூரில் பரபரப்பு

வருடந்தோறும், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழகம் முழுவதும் வெற்றி விநாயகர், சித்தி விநாயகர், கற்பக விநாயகர், செல்வ விநாயகர் என பல வகையான விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட்டு வந்த பக்தர்கள் இவ்வருடம் ஈழ விநாயகர் என்ற பெயரில் சிலைகளை நிறுவியிருக்கின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு பூசைகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் திருப்பூரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் பிரபாகரன் உருவத்தோடு ஈழ விநாயகர் சிலை ஒன்றை வைத்து சிறப்பு பூசை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.  இதனால் திருப்பூர் போலீசாரும், உளவுத்துறையினரும் விழிப்போடு அந்த சிலை நிறுவப்படுவதை தடுக்க கண்காணித்து வருகின்றனர்.

இதே போல ராமேஸ்வரம் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளும் இலங்கையை நோக்கி ஈழ விநாயகர் சிலையுடன் செல்லவிருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த முயற்சியை முறியடித்து அவர்களை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது.

காவல்துறையின் கண்காணிப்பை மீறி ஈழ விநாயகர் சிலையை நிறுவி அர்ச்சனை செய்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள் திருப்பூர் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • Sarana
    Sarana

    பிரபாகரனை மனிதனாகவே எடுக்கமுடியாது இதற்க்குள் வினாயகனாய் தமிழ்நாட்டு மக்கள் எடுத்திருப்பது அவர்களுடைய அறிவீனத்தைக் காட்டுகிறது.உலகம் முழுவதும் புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளை எடுத்துவரும் இவ்வேளையில் இது அவசியம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சிங்கள அரசும் இந்துக்களின் சமயக் கொண்டாட்டங்களை மனம் உவந்து கொண்டாட ஆரம்பித்திருக்கிறது. நல்லூர் கந்தன் தேர்திருவிழாவிற்கு விமானத்தில் மலர்கள் தூவி திருவிழாகளை சிறப்பித்தது. நீண்டகாலத்திற்கு பிறகு மடு தேவாலயமும் வெகு விமர்சியாக கொண்டாடடுவதற்கு
    அரசும் அரசபடைகளும் ஒத்துழைப்பு வழங்கியதாக செய்திகள் வந்தன. எந்தவித குறைபாடுகப் பற்றியும் புகார்கள் இல்லை. விநாயகர் சதுர்த்தியையும் இறுதியில் கடலில் கரைத்து முடித்து வைப்பார்கள். இலங்கையில் நந்திகடலில் கரைத்து முடித்து வைத்தார்கள். தெய்வதோஷம் இல்லாமல் இருந்தால் நாட்டுமக்கள் மகிழ்சியாக வாழ்வார்கள் என்று ஒரு ஐதீகம் உண்டு. நாட்டுமக்களுக்கு இனி நிறைவான காலங்களே.

    Reply
  • muni
    muni

    பிரபாகரன் உருவத்தில் விநாயகர் சிலை மட்டுமல்ல, காலப்போக்கில் மதிவதனி உருவத்தில் மாதா சிலையும், சார்ள்ஸ் அண்டனி உருவில் யேசுநாதர் சிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் பணம் பத்தும் செய்யும். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம்தான்.

    Reply
  • மாயா
    மாயா

    பிரபாகரனை கரைத்து விட தமிழக மக்கள் முயன்றதாக எடுத்துக் கொள்ளலாம்.

    Reply
  • Smart Thamilan
    Smart Thamilan

    குஷ்புவுக்கு நமீதாவுக்கு சிலுக்குக்கு கோவில் கட்டிய தமிழ்நாட்டவர்கள் எங்கள் மாண்புமிகு தேசத்தலைவருக்கும் கோவில்கட்டி பீலா காட்டி எங்கள் சூரியதேவன் தேசத்தலைவர் பிரபாகரனின் பெயருக்கு களங்கம் ஏற்படாது நாடுகடந்த தமிழ் ஈழ அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேணும்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஆமாம் Smart Thamilan இன் கோரிக்கையை ஏற்று பிரபாகரன் உருவத்தில் உள்ள விநாயகர் சிலையை உடனடியாக நாடு கடத்தி, விநாயகரின் மானத்தை காக்குமாறு நானும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

    Reply