பாகிஸ் தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி மற்றும் பஞ்சாப் மாகாண முதலமைச்சரும், நவாஸ் ஷெரீப்பின் சகோதரருமான ஷபாஸ் ஷெரீப் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரைக் கொல்ல தாலிபான்கள் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு உளவுத் துறை எச்சரித்துள்ளது.
வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவத்தின் கடும் தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் சூழ்நிலைக்கிடையேயும், மேற்கூறிய கொலைத்திட்டத்தை தாலிபான்கள் வகுத்துள்ளதாக பாகிஸ்தான் அரசை அந்நாட்டு உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இந்த கொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, 50 பேரை தாலிபான் இயக்கம் அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் இஸ்லாமாபாத்திலிருந்து ஒளிபரப்பாகும் ஜியோ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.