இடம்பெயர்ந்த மாணவர்கள் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றம்

sri-lankan-students.jpgவவுனியா இடைத்தங்கல் முகாம்களைச் சேர்ந்த 5300 மாணவர்கள் இம்முறை 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வெல்ட் தெரிவித்துள்ளார்.

மேற்படி மாணவர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள முகாம்களிலேயே, அவர்களைப் பரீட்சைக்குத் தயார் செய்தவற்கான விசேட வகுப்புக்கள் நடத்தப்பட்டதாகவும், அந்தந்த முகாம்களிலேயே அவர்கள் பரீட்சை எழுதுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வெல்ட் தெரிவித்துள்ளார். அவர்களுக்குத் தேவையான அப்பியாசப் புத்தகங்கள், எழுது கருவிகள் என்பனவும் வழங்கப்பட்டதுடன், பரீட்சை எழுதுவதற்குத் தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ள முகாம்கள் ஒன்றிரண்டைத் தவிர ஏனைய இடங்களில் இவர்களுக்குத் தேவையான தளபாட வசதிகள் இல்லாததனால், இந்த மாணவர்கள் நிலத்தில் இருந்தே பரிட்சை எழுத வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகைய மாணவர்களுக்குப் பரீட்சை எழுதுவதற்கு வசதியாக ‘காட்போர்ட்’ துண்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஒஸ்வெல்ட் கூறினார். ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கூடாரங்களில் மழை ஒழுக்கு அல்லது நிலத்தில் ஈரம் காணப்பட்டால், பாதிப்பின்றி மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்கு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘கார்ட்போட்; உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *