தெனியாயவில் காலநிலை மாற்ற கண்காணிப்பு ராடர் இயந்திரம் – ரூ. 400மில். செலவில் நிறுவ திட்டம்

நாட்டின் காலநிலையை குறுகிய நேரத்துக்குள் கணிப்பீடு செய்யும் காலநிலை மாற்ற கண்காணிப்பு ராடர் இயந்திரமொன்றை தெனியாய கொங்கலவில் நிறுவுவதற்கு காலநிலை அவதான நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உலக காலநிலை அவதான நிலைய சம்மேளன நிபுணர்களின் உதவியுடன் இந்த இயந்திரம் நிறுவப்படவுள்ளதுடன் இதனை நிறுவும் நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 400 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஜீ. பி. சமரசிங்க தெரிவித்தார்.

டொப்லர் ராடர் என அழைக்கப்படும் இவ்வியந் திரத்தை தெனியாயவில் நிறுவுவதற்கான பொறு ப்பை அமெரிக்காவின் என் டர்பிரைஸ் எலக்ட்ரோனிக் கோபரேசன் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த இயந்திரத்தின் மூலம் மிகக்குறுகிய காலத்தில் கடும் மழை, மழை பெய்யக் கூடிய பிரதேசம், காற்றின் வேகம், காற்று பயணிக்கும் திசை என்ப வற்றைக் கண்டறியமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *